ரிஷி சுனாக் பிரிட்டன் பிரதமரனாலும் ஆனார்.. அவரை வச்சு ஏகப்பட்ட Claims ஓட ஆரம்பிச்சிருக்கு. இவர் எங்க நாட்டுக்காரர் என இந்தியர்கள் சிலர் ஒரு பக்கம் ஓடிக் கொண்டுள்ளனர். மறுபக்கம் பாகிஸ்தானில், இவர் எங்க நாட்டைச் சேர்ந்த இந்து என்று சிலர் பேச ஆரம்பித்துள்ளனர். இன்னொரு பக்கம் கென்யாக்காரர்கள், அடடே.. இவர் எங்க நாட்டு பூர்வீகமாச்சே என்று புன்னகை சிந்திக் கொண்டுள்ளனர். The World Is a Global Village.. உண்மைதான்.. இன்று சாதாரணமாக, ஜனங்களோடு ஜனமாக தெருவில் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு இளைஞர் சில பத்தாண்டுகளுக்குப் பிறகு வேறு ஒரு நாட்டில் செட்டிலாகி எதிர்காலத்தில் அந்த நாட்டுக்கே அதிபராகும் நிலை வரலாம்.. இதெல்லாம் ஒரு காலத்தில் சிரித்துக் கடந்து விடக் கூடிய கற்பனையாக இருந்திருக்கலாம்.. ஆனால் இன்று அது சாத்தியம். அதைத்தான் தற்போது நாம் கண்டு கொண்டிருக்கிறோம். அமெரிக்க அதிபராக ஒபாமா வந்தபோது அதுதான் நடந்தது. அவரது பெற்றோரின் பூர்வீகம் ஆப்ரிக்கா. அதேபோல கமலா ஹாரிஸ் அமெரிக்க வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதியபோதும் அதுதான் நடந்தது. அவரது பூர்வீகம் இந்தியா, ஜமைக்கா என்று விரிவடைந்தது. இன்று ரிஷி சுன