Skip to main content

Posts

Showing posts from November, 2021

ஆண்கள் தினம் கொண்டாடும் நிலையிலா இருக்கிறோம்?

சர்வதேச ஆண்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. உண்மையில் அந்த தினத்தைக் கொண்டாடும் தகுதி ஆண்களுக்கு இருக்கிறதா.. அத்தகைய சூழலை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோமா...! சமீப காலமாக அதிகரித்து வரும் பாலியல் பலாத்கார நிகழ்வுகள் அதிர வைக்கின்றன. வயது வித்தியாசம் இல்லாமல் எங்கெங்கும் அதிகரித்துக் கிடக்கும் பாலியல் வன்கொடும் செயல்களைப் பார்க்கும்போது பெண்களை ஆண் சமுதாயம் இன்னும் காமப் பார்வையில்தானே பார்த்துக் கொண்டிருக்கிறது என்று வருந்தத்தான் தோன்றுகிறது. இந்த சூழ்நிலையில் தன்னைப் பிறர் கொண்டாடும் நிலையில் ஆண்கள் சமுதாயம் வைத்துள்ளதாக நான் கருதவில்லை. இதுகுறித்து எனது கருத்து.. இது எனது கருத்து மட்டுமே.. வீடியோவில் பகிர்ந்துள்ளேன். கேட்டு விட்டு சொல்லுங்கள். https://www.youtube.com/watch?v=Q3oaJOs6G_I #InternationalMensDay2021 #ஆண்கள்தினம்

மனைவி திட்டுவாங்க.. மகள் அலுத்துக்குவாங்க.. அதையும் தாண்டித்தான் பண்றோம்.. வெதர்மேன் "நச்"!

தமிழ்நாடு வெதர்மேன் என்று அறியப்படும் பிரதீப் ஜான்.. தமிழக மக்களுக்கு மழைக்காலங்களின்போது தகவல் குடையாக வந்து நிற்பவர். அவர் வெளியிடும் கணிப்புகளைக் கண்டு மழை குறித்த விவரங்களையும், அப்டேட்களையும் அறிந்து கொள்ள மக்கள் காத்துக் கிடப்பது வாடிக்கையாகி விட்டது. மழை வருவதற்கு முன்பு குடை வாங்கி வைத்துக் கொள்வது போல, மக்கள் மழைக்கு முன்பு பிரதீப் ஜான் வெளியிடும் மழை முன்னறிவிப்புகளை அவதானித்துக் கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள். அத்தனை துல்லியம், தெளிவு அவரது கணிப்புகளில். பிரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில் ஒரு நீண்ட நெடிய பதிவு ஒன்றைப் போட்டுள்ளார். அதன் தமிழ் மொழியாக்கம் இதோ... https://tamil.samayam.com/latest-news/state-news/we-love-eat-sleep-and-dream-about-weather-than-anything-else-says-tamilnadu-weatherman/articleshow/87660459.cms