ஒருபக்கம் இசைஞானி இளையராஜா.. இன்னொரு பக்கம் தமிழிசை செளந்தரராஜன்.. இருவருக்கும் இன்று பிறந்த நாள்.. இரு வேறு ஆளுமைகள்.. மறக்க முடியாத திறமைகள்.. அசைக்க முடியாத தனித்துவங்கள்.. ஒவ்வொருவரும் இன்று கொண்டாடப்படுகின்றனர். ஒவ்வொரு தமிழ் நெஞ்சத்தின் அடி ஆழத்திலிரும் உறைந்து போய் நிற்பவர் இளையராஜா.. அவரின்றி ஒரணுவும் அசையாது என்றுதான் சொல்ல வேண்டும். வெவ்வேறு வயதுகளில் ஒவ்வொருவரும் இருந்தாலும், ஒவ்வொருவரின் அடி மனதின் ஓரத்திலும் அவரது இசை இல்லாமல் இருக்காது. காதல், சோகம், காமம், வேகம், விவேகம், குடும்பம், அம்மா, தந்தை, நட்பு, அன்பு, அமைதி, ஆர்ப்பாட்டம், அழுகை.. என எல்லா சூழலுக்கும் நமக்குத் தேவைப்படுவது இளையராஜா என்ற அந்த மருந்துதான். அது இல்லாமல் நமது மனதின் எந்த நோயும் குணமாவதில்லை. இளையாராஜா என்பது இசை மட்டுமல்ல.. அது ஒரு போதை.. ஒருமுறை அதைத் தொட்டு விட்டால், பிறகு விடவே முடியாது.. ஆனால் இந்தப் போதை மனசுக்கு நல்லது.. மூளைக்கு நல்லது.. உயிர் வாழ்வதற்கு ரொம்பத் தேவையானதும் கூட. இளையராஜாவின் இசை முன்னாடி மாதிரி இல்லை என்று சொல்பவர்களும் உண்டு. ஆனால் அவர்கள் உண்மையான இளையராஜாவின் இசையை அறியாத