ஒரு டிவீட் பார்க்க நேர்ந்தது.. போட்டிருந்தவர் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன். அது ஒரு புத்தக வெளியீட்டு விழாவுக்கான அழைப்பிதழ்.. அதில் இடம் பெற்றிருந்த வாசகம்.. "பொத்தக வெளியீட்டு விழா".. பெரும்பாலும் புத்தக வெளியீட்டு விழா, நூல் வெளியீடு என்றுதான் பார்த்திருப்போம்.. இது வித்தியாசமாக பட்டது (எனக்கு அல்ல).. பொத்தகம் சரியா.. புத்தகம் சரியா என்ற வாதமும் கூடவே நினைவுக்கும் வந்தது. அதுதொடர்பான ஒரு விளக்க கட்டுரை (ரொம்ப குட்டிதான்.. தைரியமா படிங்க).. நினைவுக்கு வந்தது.. நாலு பேருக்கு உபயோகமாக இருக்குமே என்பதற்காக இதோ அது..! எழுதியவர்: எழுத்தாளர் சி.வி. ராஜன் பொத்தகம் தான் உண்மையான தமிழ் என்று சொந்தத் தகுதியில் நான் பொத்து --> பொத்தகம் என்று வந்தது என்று நீண்ட விளக்கம் கொடுத்தால் என் பதிலுக்கு ஆதரவு வாக்குகள் எகிறும்; ஆனால் 'புஸ்தக்' என்பதிலிருந்து புத்தகம் வந்தது, பொத்தகம் என்பது புத்தகத்தின் கொச்சை மொழி என்றால் இங்கே எதிர் வாக்கு போடுபவர்கள் உண்டு! எனவே நானும் பொத்திக்கொண்டிருக்காமல் , என் புத்திக்கெட்டிய விளக்கத்தை 'பொத்து' என்பதிலிருந்தே ஆரம்ப