யாருக்கும் தெரியாத வெறுமை
எவருக்கும் புரியாத வெறுமை
உள்ளுக்குள் உழன்று கொண்டிருக்கும் வெறுமை
வெளியில் பூச்சு பூச்சாக புன்னகை..!
தண்ணீரிலும் தீப்பிடிக்கும்
வெறுமையின் வெப்பம் கூடும்போது...!
கடந்த காலங்களின் வசந்தங்கள்
மெல்ல கழன்று போகும்போது
ஒவ்வொரு உதிர்தலிலும் உணர்வுகளின் பிரளயம்..!
முகவரியாய் மாறிக் கிடக்கும் நகையை
மெல்ல விலக்கிப் பார்த்தால்
மெளனமாக புன்னகைக்கும் கண்ணீர்..!
உருண்டு திரண்டு
தவழ்ந்து போகும் திவலைகள்
மழை நீரின் மதமதப்புக்குள் முடங்கிப் போகும்...!
ஒவ்வொரு வலிக்குள்ளும்
வீரியம் மிகு விசும்பல்கள் அமிழ்ந்திருக்கும்
வலி போக்க வழி பார்த்து
விழியோரம் பெருக காத்திருக்கும்
துளி நீரின் வீழல்கள்
விரல் வந்து தொடும் வரை
காத்திருக்கும்...!
துடிக்கும் இதழ்களுக்குள்
ஒலிக்கும் இதயத்தின் "தடக் தடக்"
இன்னும் வீறு கொள்ள
வெடித்துக் கிளம்பி வரும் வீராப்பு
தேக்கி வை
தேவைப்படும்.. புன்னகையை வீசி.. புயலைத் துரத்த!

Comments