Skip to main content

எல்லாவற்றுக்கும் தயாராக இருங்கள்.. நெருக்கடி வந்தால்.. மனம் உடைந்து போகாதீர்கள்!



காலையிலேயே வந்த ஒரு மரணச் செய்தி சோர்வைக் கொடுத்து விட்டது. என்னுடன் பணியாற்றிய, எனது சிஷ்யை தீபாவின் திடீர் மரணம் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 45 வயதில் இயற்கை எய்தியிருக்கிறார். 2 பிள்ளைகள்.. அப்பாவும் இல்லை, இதோ அம்மாவும் கிளம்பி விட்டார்.. வருத்தமாக இருக்கிறது.


இங்கு எதுவுமே நிரந்தரம் இல்லை. எதற்குமே உத்தரவாதம் இல்லை. எல்லாற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும். செட்டில் ஆகி விட்டோம்.. நமக்கு எல்லாம் இருக்கிறது என்று எப்போதுமே மனதை ரிலாக்ஸ் ஆக்கி விடாதீர்கள்.. எது வேண்டுமானாலும் நடக்கலாம்.. எப்படி வேண்டுமானாலும் மாறலாம். மாற்றத்தை எப்போதுமே எதிர்பார்த்து இருங்கள். எது நடந்தாலும் தைரியத்தை மட்டும் இழக்காதீர்கள்.. பணம், பொருள், பதவி, உறவுகள் என எது போனாலும் கவலைப்படாதீர்கள்.. நெருக்கடியான நேரத்தில் தளர்ந்து போகாமல், நிதானமாக, பொறுமையாக இருக்க முயற்சியுங்கள். அதுதான் நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை. எதுவுமே முடிவு அல்ல.. எதற்குமே யாருமே முற்றுப்புள்ளி வைக்க முடியாது. ஒவ்வொரு புள்ளியையும் கமா-வாக மாற்றிக் கொண்டு நகர முயற்சியுங்கள்.


நமக்கான வாய்ப்புகள் நிச்சயம் எங்காவது இருக்கும். நாம் தைரியமாகவும், மனோ திடத்துடனும் அதைத் தேட வேண்டும். எந்த வழியும் இல்லையே என்று வருந்தாமல், நம்பிக்கையுடன் தேடினால் உங்களுக்கான வழி நிச்சயம் கிடைக்கும். நமக்கு இருக்க வேண்டியது மன தைரியம் மட்டுமே. மன தைரியத்துடனும், நம்பிக்கையுடனும் இருந்தால்தான் நம் மேல் அமர்ந்திருக்கும் அழுத்தம் நமது உடல் நலனைப் பாதிக்காது. உங்களுக்குள் இருக்கும் அழுத்தத்தை வெளியில் கொட்டி விடுங்கள். தேங்கி நிற்காமல் நாலு பேரிடம் பேசுங்கள், இயல்பாக வைத்திருக்க முயற்சியுங்கள். உங்களை இலகுவாக்கிங்க... முடியாவிட்டாலும் கூட, செய்துதான் ஆக வேண்டும்.. வேறு வழியில்லை. எல்லாவற்றையும் உள்ளுக்குள் வைத்து அழுது புலம்பி அழுத்தத்தை அதிகரிப்பதால் சோகத்தைத்தான் சந்திக்க நேரிடும்.


வாழ்க்கையை நம்பிக்கையுடனும், சரியான முயற்சிகளுடனும் Face பண்ணுங்க.. உடைஞ்சு போய்ராதீங்க.. அசாத்தியமான நம்பிக்கை இருக்கும் வரை, நம்மை உடைக்க இந்த உலகத்தில் எவராலும் முடியாது.. நம்மை விட மோசமான நிலையில் இருப்பவர்கள் எத்தனை பேர் உள்ளனர். அவர்களது நிலையை யோசித்துப் பாருங்க.. அவர்களே நம்பிக்கையுடன் போராடும் போது நாம் மட்டும் உடைந்து போய் விடலாமா என்ன..!


போராட்டம் முக்கியம்.. அதேசமயம், ஹெல்த்தும் முக்கியம்.. அதில் கோட்டை விட்டு விடாதீர்கள்.. உங்களை நம்பியுள்ள அன்புக்குரியவர்களுக்கு அது பெரும் வேதனையைக் கொடுத்து விடும். கவனமா இருங்க.. கவலைப்படாமல் இருங்க!

Comments

Popular posts from this blog

"தைரியம்தான் சார் என்னோட பலமே..".. உலாப் போகும் உணர்வுகள் (15)

ஒரு நீண்ட மருத்துவமனை வாசம். இதுவரை அனுபவித்திராத உணர்வுகள்.. இதுவரை கண்டிராத அனுபவங்கள். ஒரு சாதாரண நபராக இல்லாமல், எனது அனுபவங்களை நான் எல்லோருக்கும் பதிவு செய்ய முக்கியக் காரணம்.. சில விஷயங்களைச் சொல்லத்தான். அரசு மருத்துவமனைகள் மீது பலருக்கும் இன்னும் நம்பிக்கை இல்லை, பயம் இருக்கிறது. ஆனால் அத்தனையையும் பொய் என்று சொல்ல வைத்து விட்டது எனது இந்த மருத்துவமனை அனுபவம். மருந்து வாசனையே இல்லாத அரசு மருத்துவமனையை இப்போதுதான் பார்க்கிறேன். அத்தனை சுத்தம். அருமையான டாக்டர்கள்.. பரிவு காட்டும் செவிலியர்கள்.. தேவையில்லாமல் மருந்துகளைப் போட்டு கஷ்டப்படுத்துவதில்லை. தேவையில்லாமல் எந்த விஷயத்தையும் செய்வதில்லை. எல்லாவற்றிலும் நிதானம், பக்குவம் காட்டுகிறார்கள். . பல விஷயங்களை மனது அசை போட்டுப் பார்க்க இந்த அனுபவம் உதவியது. அனுபவங்கள்தான் நமக்கு ஆசான். அனுபவம் பெறாத மனிதன் என்னைப் பொறுத்தவரை அரை மனிதன்தான். நல்லதோ கெட்டதோ எதையும் உணர்ந்து தெளிந்தால்தான் ஒருவருக்கு முழுமை கிடைக்கும். எந்த அனுபவமாக இருந்தாலும் அதிலிருந்து பாடம் கற்பதும் கற்ற பாடத்திலிருந்து நம்மைத் சரி செய்து கொள்வதும்  மிக முக்...