80களின் காலகட்டம்.. அத்தனை இந்தியர்களையும் ஒரு டிவி புரோகிராம் கட்டிப் போட்டு வைத்திருந்தது.. 80ஸ் கிட்ஸ்களுக்கு மறக்க முடியாத டிவி பொற்காலம் என்றால் அதுதான்.. தூர்தர்ஷன் என்ற ஒற்றை டிவி பொழுது போக்குக்குள் உழன்று கொண்டிருந்த அக்காலகட்டத்து இந்தியர்களுக்கு ஒரு ஸ்வீட் சர்ப்பிரைஸாக வந்து சேர்ந்த நிகழ்ச்சிதான்.. The World This week.. இன்று வரை அந்த நிகழ்ச்சி கொடுத்த சுவாரஸ்யத்தையும், அனுபவத்தையும், திரில்லையும் வேறு எந்த டிவி நிகழ்ச்சியும் கொடுத்ததாக எனக்கு நினைவில்லை. எப்படி ஒளியும் ஒலியும் பார்க்கக் கூட்டமாக கூடி அமர்ந்தோமோ.. அதேபோல வாராவாரம் இந்த நிகழ்ச்சிக்காக வீடுகள் தோறும் ராத்திரி 9 மணிக்கு விழாக் கோலம் பூண்டிருக்கும். ஆங்கிலம் தெரிகிறதோ இல்லையோ.. டிவி முன்பு தவறாமல் உட்கார்ந்து விடுவார்கள்.. "அறிவா.. ஷோ ஆரம்பிக்கப் போகுது.. வேகமா வா.." என்று எனது அண்ணன் அழைக்கும் குரல் இன்றும் கூட காதுகளில் ரீங்காரமிடுகிறது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பே டிவி முன்பு செட்டிலாகி விடுவோம்.. நிகழ்ச்சியின் தீம் மியூசிக்கே ஒரு திரில்லான அனுபவமாக இருக்கும்.. அந்த தபலா உருட்ட