தனிமை ஒரு வலி!




பிம்பங்கள் 'சில் அவுட்'டாக

'போகஸ்' ஆகாத சிந்தனைகள்

மனதுக்குள் சின்னதாக 'வாக்கிங்' போக...

........ தனிமை ஒரு வலி!


நடந்த பாதைகள்

பார்த்த பார்வைகள்

பேசிய பேச்சுக்கள்

........ தனிமை ஒரு வலி...!


காற்றுடன் பேசி

கலந்து சிரித்து மகிழ்ந்து உலாவி

உட்புகுந்த சந்தோஷங்கள்

உட்கார்ந்து யோசிக்கும்போது

இதயம் பிசையும் தருணங்கள்

..... தனிமை ஒரு வலி...!


கனவுகள் மட்டும் துணையாக

காட்சிகள் எல்லாம் பிழையாக

கண்ணோரம் வந்து நிற்கும் அந்த சின்னத் துளி

....... தனிமை ஒரு வலி...!


வருடங்கள் மாதங்களாய்

மாதங்கள் நாட்களாய்

நாட்கள் மணித்துளிகளாய்

மணித்துளிகள் நிமிஷங்களாய்

நிமிஷங்கள் நொடிகளாய்

போனதெல்லாம் இப்போது 'ரிவர்ஸில்'....

தனிமை ஒரு வலி...!


(2013ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி எழுதிய கவிதையின் மீள் பதிவு)

Comments