இசைஞானி இளையராஜாவின் ஒவ்வொரு பாடல் உருவான விதத்திலும் ஒரு சுவாரஸ்ய கதை புதைந்திருக்கும். அதுகுறித்து அவரது வாயாலேயே நிறைய கேட்டிருக்கிறோம். அவருடன் இருந்தவர்கள் சொல்லியும் பல கதைகள் கேட்டிருக்கிறோம்.
அப்படி ஒரு பாடல்தான் நிலா அது வானத்து மேலே. நாயகன் படத்தில் இடம் பெற்ற ஐக்கானிக் ஐட்டம் சாங் அது. ஆனால் அது முதலில் உருவான விதமே வேறு.
தாலாட்டுப் பாட்டு ஒன்றுக்கு டியூன் கேட்டுள்ளார் மணிரத்தினம். அதற்காக ராஜா போட்ட ட்யூன்தான் நிலா அது வானத்து மேலே பாடலுக்கான டியூன். ஆனால் அந்த டியூனைக் கேட்ட மணிரத்தினத்திற்கு வேறு யோசனை வந்துள்ளது.. இதை குயிலி ஆடும் ஐட்டம் பாடலுக்கான ட்யூனாக மாற்றி விடலாமா, மாற்றித் தருகிறீர்களா என்று கேட்க, ஒரு நொடி கூட யோசிக்காமல்.. அதற்கென்ன மாத்திட்டா போச்சு என்று அப்படியே டியூனை மாற்றி விட்டார்.
அதன் பிறகு இந்த ட்யூனுக்குப் பதில் தாலாட்டுப் பாடலாக ராஜா போட்டதுதான் தென் பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே பாடல்.
இந்த டியூனை வைத்துத்தான் இப்போது இன்னொரு சுவாரஸ்யத்தைக் கொடுத்துள்ளார் ராஜா. இந்த முறை அது யாரும் எதிர்பாராத ஸ்வீட் சர்ப்பிரைஸும் கூட. கொல்கத்தாவில் நவராத்திரி விழா மிகக் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நவராத்திரியையொட்டி ராஜாவின் டியூனில் ஒரு பாடல் அங்கு வெகு பிரபலமாகியுள்ளது. பெங்காலிகளுக்குத்தான் அந்த டியூன் புதுசு.. ஆனால் நம்மவர்களுக்கு அது ஏற்கனவே மனதில் பதிந்து போன மெமரபிள் டியூன்.
நிலா அது வானத்து பாடல் டியூனைத்தான் அப்படியே பக்தி ரசமாக்கி இந்த நவராத்திரி பாடலை உருவாக்கியுள்ளார் ராஜா. இந்தப் பாடலைப் பாடியிருப்பவர் உஷா உதூப். பெரும் ஹிட்டாகியுள்ள இந்த பெங்காலிப் பாடல் தமிழ் ரசிகர்களுக்கு இனிய ஆச்சரியமாக மாறியுள்ளது. உண்மையிலேயே இந்த பெங்காலி நிலா அது பாடலைக் கேட்கும்போது அத்தனை மலர்ச்சியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
அதை விட என்ன விசேஷம்னா நிலா அது வானத்து மேலே படத்தில் கப்பல் வரும்.. இதில் படகை செருகி கலக்கியுள்ளனர்.
தாலாட்டுப் பாடலுக்கான டியூனாக உருவாகி.. அது பின்னர் ஐட்டம் சாங்காக மாறி.. இப்போது பக்திப் பரவசமாக மாறி நிற்பது பெரும் ஆச்சரியம்தான். இன்னும் என்னென்ன அவதாரத்தை இந்த ட்யூன் எடுக்கப் போகிறதென்று தெரியவில்லை.. ராஜா ரசிகர்களை குஷிப்படித்தி வரும் அந்த Bhoi Maa Bhoiee என்ற அந்தப் பாடலை நீங்களும் கேட்டுப் பாருங்க.. கருத்துக்களை கமெண்ட்டில் பதிவு பண்ணுங்க.
Comments