Skip to main content

Posts

Showing posts from May, 2022

கருணாநிதி உண்மையிலேயே கொடுத்து வச்சவர்தான்.. ஆனால் ஜெயலலிதா?!

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அடுத்தடுத்து கெளரவங்கள் சேர்ந்து கொண்டே போகின்றன. இதையெல்லாம் பார்க்கும்போது அவரைப் போலவே தமிழக மக்களால் மறக்க முடியாத இன்னொரு தலைவரான ஜெயலலிதா நம் கண் முன்பு வந்து போகிறார். கருணாநிதிக்குக் கிடைத்த கெளரவங்கள் ஜெயலலிதாவுக்கு கிடைக்கவில்லை என்பதை வருத்தத்தையே ஏற்படுத்துகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை சில தலைவர்களை அத்தனை சீக்கிரம் மக்கள் மறக்க முடியாது, மறக்கக் கூடாது. அந்த வரிசையில் காமராஜர், அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் நிரந்தரமாக நீடித்து நிற்பார்கள். இவர்கள் யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் கிடையாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தமிழ்நாட்டுக்காகவும், தமிழ்நாட்டு மக்களுக்காகவும் நிறைய செய்துள்ளனர், மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர். இவர்கள் மறைந்தபோது அடுத்து வந்த தலைவர்கள், மறைந்த தலைவர்களை முறையாக கெளரவப்படுத்தியுள்ளனர். காமராஜர் மறைந்த பிறகு அவரை அடுத்து வந்த தலைவர்கள் உரிய முறையில் கெளரவப்படுத்தியுள்ளனர். காமராஜ் பெயரில் பல்கலைக்கழகம் உள்ளது. காமராஜர் பெயரில் பஸ் நிலையங்கள் உள்ளன. அதேபோல அண்ணாவுக்கு செய்யப்பட்ட கெளரவங்களின் பட்டிய

"பெண்கள் சமைக்கத்தான் லாயக்கு".. பாட்டீல்கள் இப்படித்தான்!

"நீங்கெல்லாம் எதுக்கு அரசியல்ல இருக்கீங்க..  வீட்டுக்குப் போய் சமையலைப் பாருங்க"   தேசியவாத  காங்கிரஸ் எம்பி சுப்ரியா சூலேவைப் பார்த்து இப்படிப் பேசியிருக்கிறார் மகாராஷ்டிர பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல். இது அந்த மாநிலத்தில் மட்டுமல்லாமல் தேசிய அளவில் சர்ச்சையாக மாறியுள்ளது. பெண்களை இந்த அளவுக்கு தரம் தாழ்த்தி பாஜக தலைவர் விமர்சிக்கலாமா, இப்படி ஒரு வெறித்தனமான ஆணாதிக்கப் புத்தியுடன் கூடியவர் பாஜகவின் மாநிலத் தலைவராக இருக்கலாமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால் நான் பேசியதன் அர்த்தம் வேறு.. கிராமத்தில் வழக்கமாக  சொல்லும் வார்த்தையைத்தான் பயன்படுத்தினேன்.. அதை அப்படியே அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது என்று சப்பைக் கட்டுக் கட்டியுள்ளார் பாட்டீல். நாட்டில் ஒரு பாட்டீல் மட்டும் இல்லை.. ஏகப்பட்ட பேர் இதே பொதுப் புத்தியுடன்தான் இருக்கிறார்கள். பெண்கள் எந்த வகையிலும் வளர்ந்து விடக் கூடாது.. அப்படியே வளர்ந்து வந்தால் அவர்களது கேரக்டரை சிதைத்துப் பேசுவது, கிண்டலடிப்பது, யாராவது பெண் தலைவரை விமர்சிக்க வேண்டும் என்றால் "செக்ஸிஸ்ட்" வார்த்தைகளைப் பயன்படுத்துவது... அவரது கன்

உடல் களைத்தாலும்.. உயிர் சலிக்கவில்லை.. இதுதான் "அற்புதம்"!

ஒரு பெண்ணால் என்ன செய்து விட முடியும்.. நிறைய பேரிடம் இந்த இளக்காரமான கேள்வியும், பார்வையும் இந்தக் காலத்திலும் கூட பற்றிக் கிடப்பதைப் பார்க்க முடியும்.. ஆனால் ஒரு பெண்ணாக, ஒற்றை மனுஷியாக, முழுக்க முழுக்க தாய்மை என்ற ஒரே ஆயுதத்துடன்.. அந்தத் தாய்ப் பாசம் கொடுத்த உந்துதலை மட்டும் துணையாகக் கொண்டு, விடாப் பிடியாக, வைராக்கியத்துடன் போராடி தன் மகனை மீட்டுக் கொண்டு வந்து சிறை அறையை விட "கரு"வறையே உயர்ந்தது என்பதை நிரூபித்திருக்கிறார் அற்புதம் அம்மாள். அறிவு விடுதலையில் எல்லோரையும் விட, மிகப் பெரிய பாராட்டுக்குரியவர் அற்புதம் அம்மாள்தான். இப்படி ஒரு தீரத் தாயை வரலாற்றில்தான் நாம் படித்துள்ளோம். இன்று நிஜமாகவே பார்த்து விட்டோம்.. அறிவு சிறைக்குள் போன நிமிடத்திலிருந்து தொடங்கியது அற்புதம் அம்மாளின் கண்ணீர்ப் போராட்டம். என் மகன் என்ன தவறு செய்தான்.. ஒரு பேட்டரி வாங்கிக் கொடுத்தது குற்றமா என்ற குமுறலுடன் வெடித்துக் கிளம்பினார் அந்தத் தாய். நடந்த சம்பவங்களை யாரும் நியாயப்படுத்தவில்லை, நியாயப்படுத்தவும் முடியாது.. ஆனால் "என் மகன்.. என் ரத்தம்.. என் உயிர்.. என் பிள்ளை" என்ற உணர்