Skip to main content

மகேந்திர சிங் தோனி.. லீடர்னா இப்படி இருக்கணும்!

"Still I haven’t left behind" .. இதுதான் மகேந்திர சிங் தோனி தனது ரசிகர்களுக்கு நேற்று இரவு கொடுத்த மெசேஜ்.

ஒரு டீம் லீடர் எப்படி இருக்க வேண்டும்.. ஒரு கேப்டன் எப்படி செயல்பட வேண்டும்.. ஒரு தலைவன் எப்படி உத்திகளை வகுக்க வேண்டும்.. இதற்கெல்லாம் பெஸ்ட் உதாரணம் தோனி மட்டுமே.. தான் சரியாக ஆடுகிறோமோ இல்லையோ, தனது டீம் சரியாக செயல்பட வேண்டும் என்பதில் முனைப்புடன் இருப்பவன்தான் நல்ல தலைவனாக இருக்க முடியும்.

ஒவ்வொரு விஷயத்திலும் பார்த்துப் பார்த்து தெளிவாக, குழப்பமில்லாமல் திட்டமிடும் தலைவனைக் கொண்ட அணிதான் எப்போதுமே வெல்லும்.. புலி பதுங்கித்தான் பாயும்.. அப்படித்தான் தோனி டீமும். 2018ம் ஆண்டுக்குப் பிறகு அந்த அணிக்கு கோப்பை கை கூடவில்லை. கடந்த வருடமோ மிகவும் அவமானகரமாக வெளியேற்றப்பட்டது. ஆனால் இந்த முறை அது அடித்த அடியைப் பார்த்து அத்தனை பேரும் மிரண்டு போய் விட்டனர்.

தோனியின் கேப்டன்ஷிப்.. 100 சதவீதம் தரமானது என்பதை நேற்று நடந்த இறுதிப் போட்டியும் அழுத்தம் திருத்தமாக உணர்த்தி விட்டது. ஒவ்வொரு வீரராக பார்த்துப் பார்த்து ஸ்கெட்ச் போட்டுத் தூக்கிய விதம், ரசிகர்களை உற்சாகத்தின் உச்சிக்கே கொண்டு போய் விட்டது.

உண்மையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்கள் ஆரம்பத்தில் அதிரடியாக ஆடினார்கள். கொஞ்சம் கூட பயமே இல்லாமல் தன்னம்பிக்கையுடன் ஆடிய விதம் தோனியையே கவர்ந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இத்தனைக்கும் வெங்கடேஷ் ஐயர் என்ற முக்கியமான விக்கெட்டை கோட்டை விட்டு விட்டார் தோனி. ஒருமுறை அல்ல.. 2 முறை. ஆனாலும் அவர் சோர்வடையவில்லை. தான் செய்த தவறு தனது டீம் செய்யக் கூடாது என்பதற்காக அதி வேகமாக ஆர்த்தெழுந்து அணியைத் தட்டிக் கொடுத்து தனது பிரில்லியன்ட்டான கேப்டன்ஷிப் தரத்தை வெளிப்படுத்தினார்.

பெரும் சரிவுக்குப் பிறகு சுதாரித்த சென்னை சூப்பர் கிங்ஸ், ஒவ்வொரு ஓவரையும் மிகத் தெளிவாக திட்டமிட்டு வீசியது. பீல்டிங் டைட்டானது. பந்து வீச்சாளர்களும் துல்லியமாக போட ஆரம்பித்தனர். எந்த பேட்ஸ்மேனுக்கு எந்த பவுலிங் பிரச்சினையைக் கொடுக்கும் என்று பார்த்துப் பார்த்து பவுலிங் உத்தியை மாற்றினார் தோனி. அதற்கு சரியான பலனும் கிடைத்தது.

ஒரு பக்கம் கடைசி வரை கொல்கத்தா போராடி மிரட்டியது என்றால் மறுபக்கம் துல்லியமான டீம் ஒர்க்கைக் காட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மிரள வைத்தது.. இறுதியில் வென்றது தோனி பாய்ஸ்தான். . ஆரம்பத்தில் சறுக்கினாலும் எங்க பசங்க கில்லாடி என்பதை நிரூபித்துக் காட்டி விட்டார் தோனி. இதுதான் ஒரு லீடருக்கு இருக்க வேண்டிய முக்கியமான அம்சம். கரெக்டாக டீமை வழிநடத்தி அவர் கொண்டு சென்ற முடித்த விதம்.. அத்தனை பேரையும் மிரளவைத்து விட்டது.

நான் இன்னும் பின்வாங்கவில்லை என்று அவர் போட்டிக்குப் பின்னர் கூறியது.. அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்ல.. ஒட்டுமொத்த கிரிக்கெட்டுக்குமே சந்தோஷமான விஷயம்தான்.. இன்றைய இளைஞர்களுக்கு மிகச் சரியான முன்னுதாரணம் தோனிதான். எப்போதும் விடாமுயற்சியுடன் போராட வேண்டும்.. எதையும் துல்லியமாக திட்டமிட வேண்டும்.. எதிலும் ஆணித்தரமாக இறங்க வேண்டும்.. எதையும் தெளிவுடன் செய்ய வேண்டும்.. எந்த எதிர்ப்பு வந்தாலும் தைரியமாக எதிர்கொண்டு நம்மை நிரூபிக்க வேண்டும்.. இத்தனையையும் ரொம்ப சிம்பிளாக கற்றுக் கொடுப்பவர் தோனியாக மட்டுமே இருக்க முடியும்.

சென்னைக்கு மட்டும் தோனி சூப்பர் கிங் அல்ல.. மொத்தப் பேரின் மனதையும் கட்டிப் போட்டு அத்தனை பேருக்குமான ராஜாவாக மாறி நிற்கிறார் தோனி.


Comments

ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சரியான உதாரணம் தோனி தான். உண்மையில் தல என்னும் பட்டம் மிகச் சரியானதே.

இது டாடிகளின் டீம், நிச்சயம் தேறவே தேறாது என்று முன்னணி கிரிக்கெட் விமர்சகர்களாலும், ஏன் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவன்களாலும் கூட மிகக்கடுமையாக கேலியும் கிண்டலுக்கும் ஆளானது நமது சிஎஸ்கே டீமும் தல தோனியும். ஆனால், தோனி எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. அர்ஜூனனுக்கு எப்படி மரத்தின் கிளையில் அமர்ந்திருந்த கிளியின் கழுத்து மட்டுமே குறியாக இருந்ததோ அது போலத்தான் தோனிக்கு கோப்பை மட்டுமே குறியாக இருந்தது.

யாரை டாடிகள் (உத்தப்பா, பாஃப்-டு-ப்ளசி, மொயின் அலி) என்று சொன்னார்களோ, அவர்களையே முதலில் பேட்டிங் செய்ய வைத்து ஒவ்வொரு பந்தையும் தெறிக்கவிடச் செய்து, இறுதியில் கோப்பையையும் வசப்படுத்தி, கூடவே ரசிகர்களையும் வசப்படுத்திவிட்டார்.

அது தான் தல.
Varuni said…
Thala thala dhaan....😍😍😍

Popular posts from this blog

எல்லாவற்றுக்கும் தயாராக இருங்கள்.. நெருக்கடி வந்தால்.. மனம் உடைந்து போகாதீர்கள்!

காலையிலேயே வந்த ஒரு மரணச் செய்தி சோர்வைக் கொடுத்து விட்டது. என்னுடன் பணியாற்றிய, எனது சிஷ்யை தீபாவின் திடீர் மரணம் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 45 வயதில் இயற்கை எய்தியிருக்கிறார். 2 பிள்ளைகள்.. அப்பாவும் இல்லை, இதோ அம்மாவும் கிளம்பி விட்டார்.. வருத்தமாக இருக்கிறது. இங்கு எதுவுமே நிரந்தரம் இல்லை. எதற்குமே உத்தரவாதம் இல்லை. எல்லாற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும். செட்டில் ஆகி விட்டோம்.. நமக்கு எல்லாம் இருக்கிறது என்று எப்போதுமே மனதை ரிலாக்ஸ் ஆக்கி விடாதீர்கள்.. எது வேண்டுமானாலும் நடக்கலாம்.. எப்படி வேண்டுமானாலும் மாறலாம். மாற்றத்தை எப்போதுமே எதிர்பார்த்து இருங்கள். எது நடந்தாலும் தைரியத்தை மட்டும் இழக்காதீர்கள்.. பணம், பொருள், பதவி, உறவுகள் என எது போனாலும் கவலைப்படாதீர்கள்.. நெருக்கடியான நேரத்தில் தளர்ந்து போகாமல், நிதானமாக, பொறுமையாக இருக்க முயற்சியுங்கள். அதுதான் நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை. எதுவுமே முடிவு அல்ல.. எதற்குமே யாருமே முற்றுப்புள்ளி வைக்க முடியாது. ஒவ்வொரு புள்ளியையும் கமா-வாக மாற்றிக் கொண்டு நகர முயற்சியுங்கள். நமக்கான வாய்ப்புகள் நிச்சயம் எங்காவது இருக்கும். நாம்...

ஆண்கள் தினம் கொண்டாடும் நிலையிலா இருக்கிறோம்?

சர்வதேச ஆண்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. உண்மையில் அந்த தினத்தைக் கொண்டாடும் தகுதி ஆண்களுக்கு இருக்கிறதா.. அத்தகைய சூழலை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோமா...! சமீப காலமாக அதிகரித்து வரும் பாலியல் பலாத்கார நிகழ்வுகள் அதிர வைக்கின்றன. வயது வித்தியாசம் இல்லாமல் எங்கெங்கும் அதிகரித்துக் கிடக்கும் பாலியல் வன்கொடும் செயல்களைப் பார்க்கும்போது பெண்களை ஆண் சமுதாயம் இன்னும் காமப் பார்வையில்தானே பார்த்துக் கொண்டிருக்கிறது என்று வருந்தத்தான் தோன்றுகிறது. இந்த சூழ்நிலையில் தன்னைப் பிறர் கொண்டாடும் நிலையில் ஆண்கள் சமுதாயம் வைத்துள்ளதாக நான் கருதவில்லை. இதுகுறித்து எனது கருத்து.. இது எனது கருத்து மட்டுமே.. வீடியோவில் பகிர்ந்துள்ளேன். கேட்டு விட்டு சொல்லுங்கள். https://www.youtube.com/watch?v=Q3oaJOs6G_I #InternationalMensDay2021 #ஆண்கள்தினம்