Skip to main content

"ப்ளீடிங் ஏதாவது வருதா.. இல்லையே .. நல்லாருக்கேனே".. உலாப் போகும் உணர்வுகள் (9)


3வது நாளிலேயே மருத்துவமனை வாசம் போரடிக்க ஆரம்பித்து விட்டது. சாப்பிட, படுக்க, தூங்க, வாக் போக என்று இருந்ததே ஒழிய, வேறு எந்தவிதமான சுவாரஸ்யத்தையும் பார்க்க முடியவில்லை. குறிப்பாக வேலை பார்க்க முடியவில்லை. வேலை பார்க்காமல் சும்மா இருப்பதே பெரிய போர். அதேசமயம், விதம் விதமான மனிதர்களை சந்திக்க முடிந்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

ஒரு பலூன் போலத்தான் நமது வாழ்க்கையும், பிறப்பு என்பது காற்று நிரப்புவது போல.. காற்றை இறக்கி விட்டு விட்டால் கதை முடிந்து விடும். இந்த பலூனுக்குள் இருக்கும் காற்றுதான் நமது அனுபவங்கள்.. வாழ்க்கை நெடுகிலும் நாம் சந்திக்கும் அனுபவங்கள்தான் நமது வாழ்க்கையில் நாம் சம்பாதிக்கும் ஒரே சொத்து.. 

சந்தோஷமோ, துக்கமோ, வேதனையோ, வருத்தமோ.. அனுபவங்கள் இல்லாத வாழ்க்கை யாருக்கும் கிடையாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவங்கள்.. அவைதான் நம்மை வழி நடத்துகின்றன. இப்போது அவனுக்குக் கிடைத்துக் கொண்டிருப்பதும் வித்தியாசமான அனுபவங்கள்தான்.. இதுவரை எத்தனையோ அனுபவங்களை சந்தித்துள்ள போதிலும் சமீப காலமாக ஆதவன் சந்தித்து வந்த அனுபவங்கள் அதுவரை அவன் கண்டிராதது.

கடந்த 4 மாதமாக வித்தியாசமான அனுபவங்கள்.. அதில் பல அவன் எதிர்பாராதது.. எல்லாமே அதுவரை கண்டிராதது.. ஆச்சரியமான, அதிர்ச்சிகரமான அனுபவங்கள்.. வாழ்க்கையில் இப்படியெல்லாம் கூட நடக்குமா என்ற பிரமிப்பைக் கொடுத்தவை.. அதிலிருந்து இன்னும் கூட மீள முடியாமல்தான் இருக்கிறான்.. ஆனாலும் அதையும் கூட அவன் அவனது பாணியில் சந்தோஷமாகத்தான் எடுத்துக் கொண்டிருக்கிறான்.. இதுவும் எனக்குத் தேவைதான்.. இவையும் கூட எனக்குத் தகுதியானவைதான்.. இதையும் கூட நான் சந்திப்பேன்.. இதையும் கூட மீறி வருவேன் என்ற தைரியமும், திடமும் இருந்ததால் அவன் இந்த அனுபவங்களையும் ஜஸ்ட் லைக் தட் .. கடந்து செல்ல முடிந்தது.

என்னென்னவோ சிந்தனைகளுடன் கட்டிலில் படுத்திருந்த ஆதவனை, நர்ஸின் குரல் தட்டி எழுப்பியது.

"சார்.."

"எஸ்.. சொல்லுங்க சிஸ்டர்"

"உங்களுக்கு ஏதாவது கம்ப்ளெயின்ட் இருக்கா.. ப்ளீடிங் ஏதாவது வருதா"

"ப்ளீடிங்கா.. இல்லையே அப்படியெல்லாம் இல்லை.. நல்லாருக்கேனே"

"ஓ.. ஓகே.. அப்படி ஏதாவது வந்தா சொல்லுங்க.. நிறைய தண்ணீர் குடிங்க.. இன்னிக்கு ஒரு பிளட் டெஸ்ட்டுக்காக சாம்பிள் எடுக்க வருவாங்க"

"ஓகேம்மா"

நர்ஸ் நகரவே, ஆதவனுக்குள் குழப்பம்.. எதுக்கு ப்ளீடிங் வருதான்னு கேட்டாங்க.. நல்லாதானே இருக்கோம்.. குழப்பத்துடன் இருந்தவனுக்கு அதற்குள் மேல் படுத்திருக்க முடியவில்லை. எழுந்து வெளியே போனான். நேராக டூட்டி டாக்டரிடம் சென்றான்.

"டாக்டர் .. நர்ஸ் வந்து எனக்கு ப்ளீடிங் ஆகுதான்னு கேட்டாங்க.. எனிதிங் ராங் டாக்டர்"

"இல்லை பிரச்சினையெல்லாம் இல்லை. உங்களோட பிளட்ல பிளேட்லெட் கவுன்ட் கம்மியா இருக்கு.. டெங்குவா இருக்குமோன்னு சஸ்பெக்ட் பண்றோம்.. ப்ளீடிங் ஏதும் இல்லையே"

"நோ டாக்டர்.. நல்லாதான் இருக்கேன்"

"இது சந்தேகம்தான். பயப்படத் தேவையில்லை. இன்னிக்கு ஒரு பிளட் டெஸ்ட் பார்க்கலாம். அதையே 2 நாள் கழிச்சு ரிபீட் செய்யலாம்"

ஓ.. அப்ப இன்னும்  3 நாளைக்கு வீட்டுக்குப் போக முடியாதா.. அடடா.. கடுப்பாகுதே என்று எண்ணிக்கொண்டே அறைக்குத் திரும்பினான். குழப்பத்துடன் கட்டிலில் படுத்துக் கொண்ட ஆதவனுக்கு அதற்குப் பிறகு அறைக்கு வந்து போன சர்வீஸ்காரர்கள் உள்பட எதுவுமே மனதில் சரியாக பதியவில்லை. எப்போது தூங்கினான் என்றே தெரியவில்லை. மாலை ஆகி விட்டது. வழக்கமான ரொட்டீன்கள் அடுத்தடுத்து நடந்து கொண்டிருந்தன. பிளட் சாம்பிளும் எடுத்துச் சென்றாகி விட்டது.

"சார்.. எனக்கு இன்னும் 2 ஊசிதான் இருக்கு.. அது முடிஞ்சதும் நான் கிளம்பிடுவேன்னு நினைக்கிறேன்" உற்சாகத்துடன் சொன்னார் ரவி.

"ஓ கிரேட் சார்.. வீட்டுக்குப் போனதும் கூட சில நாட்களுக்குக் கவனமா இருங்க"

"ஆமா சார்.. எனக்கு இருக்கிற உடம்பு பலவீனத்துக்கு ஒரு மாதம் ரெஸ்ட் எடுத்தாகணும்.. என்னோட பெர்சனல் டாக்டர் கிட்டேயும் பேசிட்டேன். அவரும் அதைத்தான் சொன்னார். ஊசி போட்டதுல உடம்பு ரொம்பவே வீக் ஆயிருச்சு.. ஆனால் வேற வழியில்லையே"

"உண்மைதான் சார்"

நமக்கு டெங்கு இருக்குமா இருக்காதா.. இருந்தா என்ன செய்வாங்க.. இல்லாட்டி எப்போ வீட்டுக்கு அனுப்புவாங்க.. ஆதவனுக்குள் குழப்பம்.

டெங்கு வந்தால் என்னெல்லாம் நடக்கும்.. கூகுளில் போய் தேடத் தொடங்கினான்.. இரண்டு விதமான சிச்சுவேஷனுக்கான விளக்கம் கிடைத்தது.. பிளேட்லெட் அதிகரித்தால் மாரடைப்பு வரும் அபாயம் இருக்கிறது. அதுவே பிளேட்லெட் குறைந்தால் உடம்பிலிருந்து ரத்தம் வெளியேறத் தொடங்கும். இதுதான் பிளேட்லெட் தொடர்பான அபாயமாக அதில் இருந்தது. சரி ரொம்பப் பார்த்து டென்ஷனாக வேண்டாம் என்று போனை கீழே வைத்தான். வெளியில் ஒரு ரவுண்டு போகலாம்.. ப்ரீ ஆகும் என்று நினைத்து வெளியில் வந்தான்.

ஹாலுக்கு நடந்து சென்று அங்கிருந்த சேரில் அமர்ந்தான். அப்போது பக்கத்து அறைப் பெண்மணி வந்தார்.

"என்ன சார்.. இப்போ எப்படி இருக்கு.. எப்போ டிஸ்சார்ஜ்"

"தெரியலை மேடம்.. புதுசா டெங்கு இருக்குமோன்னு வேற டவுட் கிளப்பிருக்காங்க.. ஸோ அது கிளியர் ஆனாதான் போக முடியும்னு நினைக்கிறேன்"

"ஓ அப்படியா.. "

"உங்களுக்கு பரவாயில்லையா.. "

"எனக்கு பரவாயில்லை.. பிரச்சினை இல்லை. என்னோட ஹஸ்பென்ட்தான் இன்னும் ஐசியூல இருக்கார்.  நார்மல் வார்டுக்கு மாற்ற 2 நாள் ஆகும்னு சொல்லிருக்காங்க"

"அப்படியா என்னாச்சு"

"ப்ரீத்திங் கஷ்டமாயிருந்துச்சு. அதான் அங்கு அட்மிட் பண்ணிட்டாங்க.. இப்போ நல்லாருக்கார். ஆக்சிஜன் இப்ப கொடுக்கலை, எடுத்துட்டாங்க"

"அப்ப   சரியாய்டுவார்.. டோன்ட் ஒர்ரி மேடம்"

"கண்டிப்பா.. நீங்களும் ரெஸ்ட் எடுங்க"

அறைக்குப் போகலாம் என எழுந்தான். அந்த சமயத்தில் எதிர் அறைக்கு ஒரு புதிய நோயாளி ஒருவரை கொண்டு வந்தார்கள்.. ஒரு தாத்தா.. பெயர் இளங்கோவன். ரொம்பத் தெளிவாக பேசியபடி வந்தார்.

அவரை அறைக்குள் கொண்டு வந்து விட்டு விட்டு ஆயாம்மா போய் விட்டார். தாத்தா தனது பேகை ஒரமாக வைத்து விட்டு பேன்ட்டை மாற்றி லுங்கி கட்டிக் கொண்டு வெளியே வந்தார்.

ஆதவனைப் பார்த்ததும் நின்ற அவர், "இங்க டாக்டர் எப்பப்பா வருவாங்க"

"டாக்டர் மதியம்தான் வருவாங்க அய்யா.. இப்போ வர மாட்டாங்க.. ஆனால் டூட்டி டாக்டர் 24 மணி நேரமும் இருப்பாங்க.. என்னாச்சு"

"இல்லை.. மத்தியானம் வீட்டில் சாப்பிட்டதும் வாந்தி ஆயிருச்சு. இப்போ ஆயாம்மா என்னை கொண்டு வந்து விட்டுட்டுப் போறப்போ, சாப்பிட்டுட்டுப் படுங்கன்னு சொல்லுது. இப்போ திரும்ப சாப்பிட்டா மறுபடியும் வாந்தி வருமே என்ன பண்றது"

"நல்ல கேள்விதான்.. இதுக்கு டாக்டர் கிட்டதான் நீங்க கேட்கணும்.. நேரா போய் ரைட்ல திரும்புனீங்கன்னா டூட்டி டாக்டர் உட்கார்ந்திருப்பாங்க. அவரைப் பார்த்து கேளுங்க.. சாப்பாட்டுக்கு முன்னாடி போட்டுக்க டேப்ளெட் கொடுப்பாங்க. அதைப் போட்டா வாந்தி வராது"

"சரி இரு, போய் பார்த்துட்டு வர்றேன்"

மெதுவாக திரும்பி நடக்க ஆரம்பித்தார் தாத்தா.. பெருமூச்சு விட்டபடி உள்ளே நுழைந்தான் ஆதவன்.

(தொடரும்)


10வது பகுதி

Comments

Popular posts from this blog

வாழ்க்கைப் பயணங்கள்.. எப்போதும் முடிவதில்லை!

வருடங்கள் கூடக் கூட வயதும் ஏறும்.. இது இயற்கை.. ஒவ்வொரு வருடமும் வரும் பிறந்த நாள்.. அத்தனை சந்தோஷம் தரும்.. இளம் வயதில்!. வயது மேலே செல்லச் செல்ல கொண்டாட்டங்கள் தவிர்த்து, அதைத் தாண்டி கவலைகளும், அதன் தாக்கங்களால் ஏற்படும் ஏக்கங்களும் நிரம்பிக் கிடக்கும். என்னைப் பொறுத்தவரை கவலைகளை நான் பெரிதாக தேக்கி வைத்துக் கொள்வதில்லை. எனக்கும் கவலைகள் வரும், சோகங்களும் நிழலாடும்.. வருத்தங்களும் வந்து போகும்.. ஆனால் எல்லோருமே "விசிட்டிங் புரபசர்" போலத்தான்.. வருவார்கள், வந்த வேகத்தில் போய் விடுவார்கள். எனவே எனக்கென்று தனியாக கொண்டாட்டங்களை வைத்துக் கொள்வதில்லை. எல்லா நாளுமே எனக்கு கொண்டாட்டம்தான்.. என்னுடன் இருப்பவர்களின் சந்தோஷமே எனது சந்தோஷமும்.. நான் எப்போதும் உற்சாகமாக இருப்பதன் ரகசியம் இதுதான்! இதுவரை எந்தப் பிறந்த நாளிலும் அடைந்திராத ஒரு சந்தோஷத்தை, உச்சகட்ட மகிழ்ச்சியை இந்த 53வது பிறந்த நாளில் உணர்ந்து, மனசு நெகிழ்ந்து, உற்சாகத்தில் நிரம்பியிருக்கிறது. நிறைய காரணங்கள்.  அதில் ஒரு விஷயத்தை மட்டும் இங்கு பகிர ஆசைப்படுகிறேன். ஒவ்வொருவருக்கும் ஏகப்பட்ட ஆசைகள், கனவுகள் இருக்கும். எனக்க

"நல்லா ரெஸ்ட் எடுங்க.. அப்பா"... உலாப் போகும் உணர்வுகள் (2)

இருக்கு.. இந்த ஆஸ்பத்திரியில் நமக்கு வித்தியாசமான அனுபவம் இருக்கு என்று மனதுக்குள் ஒரு அசரீரி ஓட.. மெல்லிய சிந்தனையுடன் தனது பேகை எடுத்து கட்டில் மீது மீது வைத்து அதைத் திறந்து துணிகளை புரட்டி லுங்கியை உருவி அதைக் கட்டிக் கொண்டான் ஆதவன்.  செல்போனை எடுத்து வீட்டுக்கு போன் செய்து, நான் வந்துட்டேம்மா.. எல்லாம் நல்லாருக்கு. நல்ல ரூம் மேட் கிடைச்சிருக்கார் என்று கூறி விட்டு போனை கீழே வைத்தான்.  அறைக்கு வெளியே என்ன நிலவரம் என்று பார்ப்பதற்காக மெல்ல வெளியேறி வந்தான். நீண்டு கிடந்த காரிடாரில் ஒரு விதமான அமைதி. அறைகள் எல்லாம் கதவு பூட்டப்பட்டுக் கிடந்தன. ஆனால் உள்ளுக்குள் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. ஆட்கள் இருக்கிறார்கள், அமைதியாக. ஆதவனின் அறைக்கு இடதுபுறத்தில் ஒரு அறை. அதில் அப்பா, மகள் இருப்பது தெரிந்தது. அதற்கு எதிர்புற வரிசை மூலை அறையில் ஒரு வயதான கணவன், மனைவி. கணவர் தண்ணீர் பிடிப்பதற்காக பிளாஸ்க்குடன் வந்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்து ஆதவன் புன்னகைத்தான். பதிலுக்கு அவரிடமிருந்தும் ஒரு சின்னப் புன்னகை. "நல்லாருக்கீங்களா. இப்ப பரவாயில்லையா" "நல்லாருக்கேன் சார்.. புது

"கிங் இன்ஸ்டிடியூட் அரிசில நம்ம பெயர் எழுதியிருந்தா என்ன சார் செய்ய முடியும்?".. உலாப் போகும் உணர்வுகள் (1)

 "என்னங்க பண்ணலாம்.. பேசாம ஹாஸ்பிடல் போய் அட்மிட் ஆயிடுறீங்களா?" லட்சுமி அப்படிக் கேட்டபோது ஆதவனுக்கு தெளிவாக எந்த யோசனையும் வரவில்லை. மனதுக்குள் மெல்ல குழப்பம் குடியேறியது. போகலாமா, வேண்டாமா என்ற குழப்பத்தை விட, நமக்கு ஏதாவது நடந்து விட்டால் அகிலன் நிலைமை என்னாகும் என்ற பயம்தான் முதலில் தலை தூக்கியது. கையில் வைத்திருந்த ரிப்போர்ட்டை திரும்பப் பார்த்தான்.. சின்ன யோசனைக்குப் பிறகு " ரிஸ்க் எடுக்க வேண்டாம் லட்சுமி, ஹாஸ்பிடல் போயிடலாம்" ஆதவன் சொன்னதைக் கேட்டதும், லட்சுமிக்கும் அதுவே சரியென்று பட்டது. அடுத்த சில நிமிடங்களில் பேக்கிங் முடிய.. 4 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பினான் ஆதவன். மனதுக்குள் இனம் புரியாத குழப்பம்.. பயமெல்லாம் பெரிதாக இல்லாவிட்டாலும் கூட ஏதோ ஒரு குழப்பம்.. கார் மெல்ல வேகம் பிடித்து பாய்ந்து செல்ல, பின்னால் ஓடிச் சென்ற உருவங்களை உள்வாங்கி வேடிக்கை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்த ஆதவனுக்குள் எண்ணற்ற சிந்தனைகள். ஒவ்வொருவருக்கும் ஒரு வாழ்க்கை.. ஒவ்வொரு விதமாக.. ஒவ்வொரு சுவையில், ஒவ்வொரு திசையில்.. அத்தனை பேரையும் வதைத்துக் கொண்டிருக்கும் ஒற்றைச் சொல்லாக.