வருடங்கள் கூடக் கூட வயதும் ஏறும்.. இது இயற்கை.. ஒவ்வொரு வருடமும் வரும் பிறந்த நாள்.. அத்தனை சந்தோஷம் தரும்.. இளம் வயதில்!. வயது மேலே செல்லச் செல்ல கொண்டாட்டங்கள் தவிர்த்து, அதைத் தாண்டி கவலைகளும், அதன் தாக்கங்களால் ஏற்படும் ஏக்கங்களும் நிரம்பிக் கிடக்கும். என்னைப் பொறுத்தவரை கவலைகளை நான் பெரிதாக தேக்கி வைத்துக் கொள்வதில்லை. எனக்கும் கவலைகள் வரும், சோகங்களும் நிழலாடும்.. வருத்தங்களும் வந்து போகும்.. ஆனால் எல்லோருமே "விசிட்டிங் புரபசர்" போலத்தான்.. வருவார்கள், வந்த வேகத்தில் போய் விடுவார்கள். எனவே எனக்கென்று தனியாக கொண்டாட்டங்களை வைத்துக் கொள்வதில்லை. எல்லா நாளுமே எனக்கு கொண்டாட்டம்தான்.. என்னுடன் இருப்பவர்களின் சந்தோஷமே எனது சந்தோஷமும்.. நான் எப்போதும் உற்சாகமாக இருப்பதன் ரகசியம் இதுதான்! இதுவரை எந்தப் பிறந்த நாளிலும் அடைந்திராத ஒரு சந்தோஷத்தை, உச்சகட்ட மகிழ்ச்சியை இந்த 53வது பிறந்த நாளில் உணர்ந்து, மனசு நெகிழ்ந்து, உற்சாகத்தில் நிரம்பியிருக்கிறது. நிறைய காரணங்கள். அதில் ஒரு விஷயத்தை மட்டும் இங்கு பகிர ஆசைப்படுகிறேன். ஒவ்வொருவருக்கும் ஏகப்பட்ட ஆசைகள், கனவுகள் இருக்கும். எனக்க
ரிஷி சுனாக் பிரிட்டன் பிரதமரனாலும் ஆனார்.. அவரை வச்சு ஏகப்பட்ட Claims ஓட ஆரம்பிச்சிருக்கு. இவர் எங்க நாட்டுக்காரர் என இந்தியர்கள் சிலர் ஒரு பக்கம் ஓடிக் கொண்டுள்ளனர். மறுபக்கம் பாகிஸ்தானில், இவர் எங்க நாட்டைச் சேர்ந்த இந்து என்று சிலர் பேச ஆரம்பித்துள்ளனர். இன்னொரு பக்கம் கென்யாக்காரர்கள், அடடே.. இவர் எங்க நாட்டு பூர்வீகமாச்சே என்று புன்னகை சிந்திக் கொண்டுள்ளனர். The World Is a Global Village.. உண்மைதான்.. இன்று சாதாரணமாக, ஜனங்களோடு ஜனமாக தெருவில் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு இளைஞர் சில பத்தாண்டுகளுக்குப் பிறகு வேறு ஒரு நாட்டில் செட்டிலாகி எதிர்காலத்தில் அந்த நாட்டுக்கே அதிபராகும் நிலை வரலாம்.. இதெல்லாம் ஒரு காலத்தில் சிரித்துக் கடந்து விடக் கூடிய கற்பனையாக இருந்திருக்கலாம்.. ஆனால் இன்று அது சாத்தியம். அதைத்தான் தற்போது நாம் கண்டு கொண்டிருக்கிறோம். அமெரிக்க அதிபராக ஒபாமா வந்தபோது அதுதான் நடந்தது. அவரது பெற்றோரின் பூர்வீகம் ஆப்ரிக்கா. அதேபோல கமலா ஹாரிஸ் அமெரிக்க வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதியபோதும் அதுதான் நடந்தது. அவரது பூர்வீகம் இந்தியா, ஜமைக்கா என்று விரிவடைந்தது. இன்று ரிஷி சுன