Skip to main content

தூக்கத்துக்குள் மெல்ல நழுவி.. அந்த நொடி இருக்கே.. சொர்க்கம் சார்!


சாப்பிட்டு அப்பத்தான் உட்கார்ந்திருப்போம்.. அப்படியே கண்கள் சொருகி.. மெல்ல தூக்கத்துக்குள் விழும் அந்த நொடி இருக்கே.. சொர்க்கம் சார்!

நிறையப் பேருக்கு இந்தப் பழக்கம் இருக்கும்.. சாப்பிட்டு முடித்ததும் ஒரு குட்டித் தூக்கம் போட்டால்தான் அந்த நாளின் மதியம் முழுமை பெறும்.

கை கால்களை நீட்டி படுக்கக் கூட வேண்டாம்.. அப்படியே சேரில் சாய்ந்தபடி கண்களை அரைகுறையாக மூடி ஒரு மிதப்பு நிலையில் வரும் அந்தத் தூக்கம் இருக்கே.. அதை அனுபவிக்காவிட்டால் எப்படிங்க...! எனக்கெல்லாம் சாப்பிட்டு கொஞ்ச நேரத்திலேயே லைட்டாக கண்ணைக் கட்ட ஆரம்பிக்கும்.. அதுவும் அலுவலகத்தில் வரும் அந்த அரைகுறை கோழித் தூக்கம் இருக்கே.. பல முறை பாஸ் கண்ணில் பட்டு சிரித்து நழுவிய தருணங்களை மறக்க முடியாது..!

சில நிமிடங்களுக்கு முன்பு சக்திவேல் சாரின் ஞாபகம் வந்தது. அருமையானவர். கதை பேசினால் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.  கதை கேட்கும்போது யாருக்காவது தூக்கம் வந்தால் அவரை டிஸ்டர்ப் செய்யவே மாட்டார். கடிந்து கொள்ள மாட்டார். அப்டியே தூங்கட்டும் தொந்தரவு செய்யாதே என்று அன்பாகச் சொல்வார். விழித்து எழுந்துதம், தூங்கிய நபருக்கு தான் அதுவரை பேசியதை, சுருக்கமாக சொல்லி விட்டும் செல்வார். 

அப்போதெல்லாம் எனக்கு இயற்பியல் அவ்வளவாக பிடிக்காது. என்னமோ மாதிரி ஒரு பீலிங் வரும்.. ஆனால் அவ்வளவு அழகாக பாட்டி வடை சுட்ட  கதை போல ஜில்லென்று சொல்லி முடித்து நிறுத்துவார் சக்திவேல் சார். அவர் சொல்லித் தரும் அந்த அழகுக்காகவே அந்தப் பாடத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆசை வரும்.. உலக அளவில் முக்கியமான அறிஞர்கள் குறித்து அத்தனை அழகாக, சுருக்கமாக, தெளிவாக விளக்கிச் சொல்வதில் அவர் கில்லாடி.

அவர் பேசும் சப்ஜெக்ட் எப்படியோ,  ஆனால் அவர் சொல்லும் விதத்தைக் கேட்கும்போதே, இயற்பியலும் அழகே என்ற உணர்வு வரும்..  எளிதில் புரியாத இயற்பியல் மீது சின்னதாக ஒரு ஈர்ப்பு வர வைத்தவர் இந்த சக்திவேல் சார்தான். எப்போது அரைத் தூக்கம் வந்தாலும் பின்னாடியே சக்தி வேல் சாரின் அந்த லெக்சரும், அவரது அருமையான போதனையும் நினைவுக்கு வராமல் போகாது.

- எனது பல்கலைக்கழக guest professor ஆக இருந்தவர்தான் ஐயா சக்திவேல்.

Comments

387 Booma said…
It is called POWER NAP...highly healthier...many will say afternoon sleep not good for health and will put morebody weight...but long time sleep in d afternoon is only not good...POWER NAP is good...

Popular posts from this blog

எல்லாவற்றுக்கும் தயாராக இருங்கள்.. நெருக்கடி வந்தால்.. மனம் உடைந்து போகாதீர்கள்!

காலையிலேயே வந்த ஒரு மரணச் செய்தி சோர்வைக் கொடுத்து விட்டது. என்னுடன் பணியாற்றிய, எனது சிஷ்யை தீபாவின் திடீர் மரணம் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 45 வயதில் இயற்கை எய்தியிருக்கிறார். 2 பிள்ளைகள்.. அப்பாவும் இல்லை, இதோ அம்மாவும் கிளம்பி விட்டார்.. வருத்தமாக இருக்கிறது. இங்கு எதுவுமே நிரந்தரம் இல்லை. எதற்குமே உத்தரவாதம் இல்லை. எல்லாற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும். செட்டில் ஆகி விட்டோம்.. நமக்கு எல்லாம் இருக்கிறது என்று எப்போதுமே மனதை ரிலாக்ஸ் ஆக்கி விடாதீர்கள்.. எது வேண்டுமானாலும் நடக்கலாம்.. எப்படி வேண்டுமானாலும் மாறலாம். மாற்றத்தை எப்போதுமே எதிர்பார்த்து இருங்கள். எது நடந்தாலும் தைரியத்தை மட்டும் இழக்காதீர்கள்.. பணம், பொருள், பதவி, உறவுகள் என எது போனாலும் கவலைப்படாதீர்கள்.. நெருக்கடியான நேரத்தில் தளர்ந்து போகாமல், நிதானமாக, பொறுமையாக இருக்க முயற்சியுங்கள். அதுதான் நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை. எதுவுமே முடிவு அல்ல.. எதற்குமே யாருமே முற்றுப்புள்ளி வைக்க முடியாது. ஒவ்வொரு புள்ளியையும் கமா-வாக மாற்றிக் கொண்டு நகர முயற்சியுங்கள். நமக்கான வாய்ப்புகள் நிச்சயம் எங்காவது இருக்கும். நாம்...

ஆண்கள் தினம் கொண்டாடும் நிலையிலா இருக்கிறோம்?

சர்வதேச ஆண்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. உண்மையில் அந்த தினத்தைக் கொண்டாடும் தகுதி ஆண்களுக்கு இருக்கிறதா.. அத்தகைய சூழலை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோமா...! சமீப காலமாக அதிகரித்து வரும் பாலியல் பலாத்கார நிகழ்வுகள் அதிர வைக்கின்றன. வயது வித்தியாசம் இல்லாமல் எங்கெங்கும் அதிகரித்துக் கிடக்கும் பாலியல் வன்கொடும் செயல்களைப் பார்க்கும்போது பெண்களை ஆண் சமுதாயம் இன்னும் காமப் பார்வையில்தானே பார்த்துக் கொண்டிருக்கிறது என்று வருந்தத்தான் தோன்றுகிறது. இந்த சூழ்நிலையில் தன்னைப் பிறர் கொண்டாடும் நிலையில் ஆண்கள் சமுதாயம் வைத்துள்ளதாக நான் கருதவில்லை. இதுகுறித்து எனது கருத்து.. இது எனது கருத்து மட்டுமே.. வீடியோவில் பகிர்ந்துள்ளேன். கேட்டு விட்டு சொல்லுங்கள். https://www.youtube.com/watch?v=Q3oaJOs6G_I #InternationalMensDay2021 #ஆண்கள்தினம்