Skip to main content

தூக்கத்துக்குள் மெல்ல நழுவி.. அந்த நொடி இருக்கே.. சொர்க்கம் சார்!


சாப்பிட்டு அப்பத்தான் உட்கார்ந்திருப்போம்.. அப்படியே கண்கள் சொருகி.. மெல்ல தூக்கத்துக்குள் விழும் அந்த நொடி இருக்கே.. சொர்க்கம் சார்!

நிறையப் பேருக்கு இந்தப் பழக்கம் இருக்கும்.. சாப்பிட்டு முடித்ததும் ஒரு குட்டித் தூக்கம் போட்டால்தான் அந்த நாளின் மதியம் முழுமை பெறும்.

கை கால்களை நீட்டி படுக்கக் கூட வேண்டாம்.. அப்படியே சேரில் சாய்ந்தபடி கண்களை அரைகுறையாக மூடி ஒரு மிதப்பு நிலையில் வரும் அந்தத் தூக்கம் இருக்கே.. அதை அனுபவிக்காவிட்டால் எப்படிங்க...! எனக்கெல்லாம் சாப்பிட்டு கொஞ்ச நேரத்திலேயே லைட்டாக கண்ணைக் கட்ட ஆரம்பிக்கும்.. அதுவும் அலுவலகத்தில் வரும் அந்த அரைகுறை கோழித் தூக்கம் இருக்கே.. பல முறை பாஸ் கண்ணில் பட்டு சிரித்து நழுவிய தருணங்களை மறக்க முடியாது..!

சில நிமிடங்களுக்கு முன்பு சக்திவேல் சாரின் ஞாபகம் வந்தது. அருமையானவர். கதை பேசினால் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.  கதை கேட்கும்போது யாருக்காவது தூக்கம் வந்தால் அவரை டிஸ்டர்ப் செய்யவே மாட்டார். கடிந்து கொள்ள மாட்டார். அப்டியே தூங்கட்டும் தொந்தரவு செய்யாதே என்று அன்பாகச் சொல்வார். விழித்து எழுந்துதம், தூங்கிய நபருக்கு தான் அதுவரை பேசியதை, சுருக்கமாக சொல்லி விட்டும் செல்வார். 

அப்போதெல்லாம் எனக்கு இயற்பியல் அவ்வளவாக பிடிக்காது. என்னமோ மாதிரி ஒரு பீலிங் வரும்.. ஆனால் அவ்வளவு அழகாக பாட்டி வடை சுட்ட  கதை போல ஜில்லென்று சொல்லி முடித்து நிறுத்துவார் சக்திவேல் சார். அவர் சொல்லித் தரும் அந்த அழகுக்காகவே அந்தப் பாடத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆசை வரும்.. உலக அளவில் முக்கியமான அறிஞர்கள் குறித்து அத்தனை அழகாக, சுருக்கமாக, தெளிவாக விளக்கிச் சொல்வதில் அவர் கில்லாடி.

அவர் பேசும் சப்ஜெக்ட் எப்படியோ,  ஆனால் அவர் சொல்லும் விதத்தைக் கேட்கும்போதே, இயற்பியலும் அழகே என்ற உணர்வு வரும்..  எளிதில் புரியாத இயற்பியல் மீது சின்னதாக ஒரு ஈர்ப்பு வர வைத்தவர் இந்த சக்திவேல் சார்தான். எப்போது அரைத் தூக்கம் வந்தாலும் பின்னாடியே சக்தி வேல் சாரின் அந்த லெக்சரும், அவரது அருமையான போதனையும் நினைவுக்கு வராமல் போகாது.

- எனது பல்கலைக்கழக guest professor ஆக இருந்தவர்தான் ஐயா சக்திவேல்.

Comments

387 Booma said…
It is called POWER NAP...highly healthier...many will say afternoon sleep not good for health and will put morebody weight...but long time sleep in d afternoon is only not good...POWER NAP is good...

Popular posts from this blog

எனது அடையாளம் எனது கைகளில்!

 எனது அடையாளம்  எனது கைகளில்! பிறர் செதுக்கிய சிலையல்ல நான் வலிகள் சுமந்து வழிகள் கடந்து நானே செதுக்கிக் கொள்ளும் சுயரூபம்! - யார் இட்ட கோடுகளும் என் எல்லைகளைத் தீர்மானிப்பதில்லை. ஊர் சொன்ன சொல்லுக்குள் என் உலகம் அடங்குவதில்லை. விழுந்த இடங்களே என் வெற்றியின் அஸ்திவாரம்! எழுந்த வேகமே என் சிறகுகளின் அடையாளம்! நேற்றைய தழும்புகள் இன்றைய பாடங்கள்... நாளை நான் யார் என்பதை நானே தீர்மானிப்பேன்!  என் வானம், என் சிறகு, என் பயணம், என் அடையாளம்! சுயபுத்திச் சூரியனில்  சுடர்விடும் தனித்தீ! கூட்டம் சொல்வது பாதையல்ல! நிழல்கள் தருவது வாழ்வல்ல! எரிக்கும் நெருப்பிலும்  எனக்கான சிம்மாசனத்தை  நானே செதுக்குவேன்!

முருகேசன் சார்..!

விக்கிபீடியாக்கள், சேட்(ஜிபிடி)டன்கள், ஜெமினி(கணேசன்கள்) வருவதற்கு முன்பு, நடமாடி வந்த ஒரு டிஜிட்டல் மூளைக்காரர். எந்த விவரம் கேட்டாலும் கண்ணை மூடி சில நொடி யோசித்து, கண்ணைத் திறக்காமலேயே கடகடவென அவரது வாய் உதிர்க்கும் தகவல்களைக் கேட்டு பயந்து போயிருக்கிறேன். "என்ன சுதா சாப்பிட்டீங்களா.. சோறு முக்கியம்.. சாப்பிடாம வேலை பார்க்காதீங்க.. ஏன்னா வேலையை ஆரம்பிச்சுட்டா சாப்பிட டைம் இருக்காது".. என்று அவருக்கே உரிய பாணியில் சிரித்தபடி கேட்டது இப்போதும் மலர்ந்த நினைவாக இருக்கிறது.. ஆனால் அவர் ஒழுங்காக சாப்பிட மாட்டார். வேலை வேலை வேலை.. இதைத் தவிர வேறு எதையுமே அறியாதவர் அவர்.  தனது வாழ்க்கையின் பெரும் பகுதியை சென்னையில் உள்ள சேவல் பண்ணையிலேயே (மேன்சன்) கழித்தவர். எனது ஆரம்ப கால பத்திரிகையாளர் வாழ்க்கையில் மறக்க முடியாத மனிதர்களில் இவரும் ஒருவர். மாலைமுரசு அலுவலகத்தில் ஒரு வருடம் மட்டுமே பணியாற்றிய போதிலும் கூட இவர் ஏற்படுத்திய தாக்கம் இதோ இப்போது இந்த அஞ்சலியை எழுதும் வரையிலு்ம் கூட வீரியத்துடன் உலவிக் கொண்டுள்ளது. மெஷின்களிடம் வேலையைக் கொடுத்து விட்டு மூளையை தூக்கி மூலையில் போட்டு விட...

"தைரியம்தான் சார் என்னோட பலமே..".. உலாப் போகும் உணர்வுகள் (15)

ஒரு நீண்ட மருத்துவமனை வாசம். இதுவரை அனுபவித்திராத உணர்வுகள்.. இதுவரை கண்டிராத அனுபவங்கள். ஒரு சாதாரண நபராக இல்லாமல், எனது அனுபவங்களை நான் எல்லோருக்கும் பதிவு செய்ய முக்கியக் காரணம்.. சில விஷயங்களைச் சொல்லத்தான். அரசு மருத்துவமனைகள் மீது பலருக்கும் இன்னும் நம்பிக்கை இல்லை, பயம் இருக்கிறது. ஆனால் அத்தனையையும் பொய் என்று சொல்ல வைத்து விட்டது எனது இந்த மருத்துவமனை அனுபவம். மருந்து வாசனையே இல்லாத அரசு மருத்துவமனையை இப்போதுதான் பார்க்கிறேன். அத்தனை சுத்தம். அருமையான டாக்டர்கள்.. பரிவு காட்டும் செவிலியர்கள்.. தேவையில்லாமல் மருந்துகளைப் போட்டு கஷ்டப்படுத்துவதில்லை. தேவையில்லாமல் எந்த விஷயத்தையும் செய்வதில்லை. எல்லாவற்றிலும் நிதானம், பக்குவம் காட்டுகிறார்கள். . பல விஷயங்களை மனது அசை போட்டுப் பார்க்க இந்த அனுபவம் உதவியது. அனுபவங்கள்தான் நமக்கு ஆசான். அனுபவம் பெறாத மனிதன் என்னைப் பொறுத்தவரை அரை மனிதன்தான். நல்லதோ கெட்டதோ எதையும் உணர்ந்து தெளிந்தால்தான் ஒருவருக்கு முழுமை கிடைக்கும். எந்த அனுபவமாக இருந்தாலும் அதிலிருந்து பாடம் கற்பதும் கற்ற பாடத்திலிருந்து நம்மைத் சரி செய்து கொள்வதும்  மிக முக்...