சாப்பிட்டு அப்பத்தான் உட்கார்ந்திருப்போம்.. அப்படியே கண்கள் சொருகி.. மெல்ல தூக்கத்துக்குள் விழும் அந்த நொடி இருக்கே.. சொர்க்கம் சார்!
நிறையப் பேருக்கு இந்தப் பழக்கம் இருக்கும்.. சாப்பிட்டு முடித்ததும் ஒரு குட்டித் தூக்கம் போட்டால்தான் அந்த நாளின் மதியம் முழுமை பெறும்.
கை கால்களை நீட்டி படுக்கக் கூட வேண்டாம்.. அப்படியே சேரில் சாய்ந்தபடி கண்களை அரைகுறையாக மூடி ஒரு மிதப்பு நிலையில் வரும் அந்தத் தூக்கம் இருக்கே.. அதை அனுபவிக்காவிட்டால் எப்படிங்க...! எனக்கெல்லாம் சாப்பிட்டு கொஞ்ச நேரத்திலேயே லைட்டாக கண்ணைக் கட்ட ஆரம்பிக்கும்.. அதுவும் அலுவலகத்தில் வரும் அந்த அரைகுறை கோழித் தூக்கம் இருக்கே.. பல முறை பாஸ் கண்ணில் பட்டு சிரித்து நழுவிய தருணங்களை மறக்க முடியாது..!
சில நிமிடங்களுக்கு முன்பு சக்திவேல் சாரின் ஞாபகம் வந்தது. அருமையானவர். கதை பேசினால் கேட்டுக் கொண்டே இருக்கலாம். கதை கேட்கும்போது யாருக்காவது தூக்கம் வந்தால் அவரை டிஸ்டர்ப் செய்யவே மாட்டார். கடிந்து கொள்ள மாட்டார். அப்டியே தூங்கட்டும் தொந்தரவு செய்யாதே என்று அன்பாகச் சொல்வார். விழித்து எழுந்துதம், தூங்கிய நபருக்கு தான் அதுவரை பேசியதை, சுருக்கமாக சொல்லி விட்டும் செல்வார்.
அப்போதெல்லாம் எனக்கு இயற்பியல் அவ்வளவாக பிடிக்காது. என்னமோ மாதிரி ஒரு பீலிங் வரும்.. ஆனால் அவ்வளவு அழகாக பாட்டி வடை சுட்ட கதை போல ஜில்லென்று சொல்லி முடித்து நிறுத்துவார் சக்திவேல் சார். அவர் சொல்லித் தரும் அந்த அழகுக்காகவே அந்தப் பாடத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆசை வரும்.. உலக அளவில் முக்கியமான அறிஞர்கள் குறித்து அத்தனை அழகாக, சுருக்கமாக, தெளிவாக விளக்கிச் சொல்வதில் அவர் கில்லாடி.
அவர் பேசும் சப்ஜெக்ட் எப்படியோ, ஆனால் அவர் சொல்லும் விதத்தைக் கேட்கும்போதே, இயற்பியலும் அழகே என்ற உணர்வு வரும்.. எளிதில் புரியாத இயற்பியல் மீது சின்னதாக ஒரு ஈர்ப்பு வர வைத்தவர் இந்த சக்திவேல் சார்தான். எப்போது அரைத் தூக்கம் வந்தாலும் பின்னாடியே சக்தி வேல் சாரின் அந்த லெக்சரும், அவரது அருமையான போதனையும் நினைவுக்கு வராமல் போகாது.
- எனது பல்கலைக்கழக guest professor ஆக இருந்தவர்தான் ஐயா சக்திவேல்.
Comments