தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட எல்லாவற்றையும் திறந்து விட ஆரம்பித்து விட்டார்கள். கோவில்களை திறக்கச் சொல்லி விட்டார்கள். எல்கேஜி, யுகேஜி வகுப்புகளையும் திறக்கச் சொல்லி விட்டார்கள். பீச்சுக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் போகலாம் என்று ஓகே சொல்லி விட்டார்கள்.. திரும்பும் பக்கமெல்லாம் திறப்பு செய்திகளாகவே இருக்கிறது. என்னாச்சு.. கொரோனா முடிஞ்சு போச்சா.. அல்லது ஒழிஞ்சு போச்சா...? அரசு எடுக்கும் முடிவுகள் எல்லாமே மக்களின் நலனைக் கருத்தில் கொண்டுதான் இருக்கும், இருக்க வேண்டும். அதேசமயம், பல நேரங்களில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சில முடிவுகளை அரசு எடுக்க வேண்டியிருக்கும். அப்படித்தான் சில முடிவுகளைப் பார்க்க வேண்டியுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நேற்று மட்டும் 20 பேர் கொரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். நேற்று பதிவான புதிய கேஸ்களின் எண்ணிக்கை 1280. மீண்டு வந்தோர் இதை விட அதிகம் என்பது சந்தோஷமானது, அதாவது 1438 பேர் நேற்று கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். தமிழகம் முழுவதும் நேற்றைய நிலவரப்படி 15,451 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன. சென்னையும், கோவையும் தான் தொடர்ந்து அதிக கேஸ்களை பதிவு செய்கின்றன. ஆனால் இரண்ட...