Skip to main content

Posts

முருகேசன் சார்..!

விக்கிபீடியாக்கள், சேட்(ஜிபிடி)டன்கள், ஜெமினி(கணேசன்கள்) வருவதற்கு முன்பு, நடமாடி வந்த ஒரு டிஜிட்டல் மூளைக்காரர். எந்த விவரம் கேட்டாலும் கண்ணை மூடி சில நொடி யோசித்து, கண்ணைத் திறக்காமலேயே கடகடவென அவரது வாய் உதிர்க்கும் தகவல்களைக் கேட்டு பயந்து போயிருக்கிறேன். "என்ன சுதா சாப்பிட்டீங்களா.. சோறு முக்கியம்.. சாப்பிடாம வேலை பார்க்காதீங்க.. ஏன்னா வேலையை ஆரம்பிச்சுட்டா சாப்பிட டைம் இருக்காது".. என்று அவருக்கே உரிய பாணியில் சிரித்தபடி கேட்டது இப்போதும் மலர்ந்த நினைவாக இருக்கிறது.. ஆனால் அவர் ஒழுங்காக சாப்பிட மாட்டார். வேலை வேலை வேலை.. இதைத் தவிர வேறு எதையுமே அறியாதவர் அவர்.  தனது வாழ்க்கையின் பெரும் பகுதியை சென்னையில் உள்ள சேவல் பண்ணையிலேயே (மேன்சன்) கழித்தவர். எனது ஆரம்ப கால பத்திரிகையாளர் வாழ்க்கையில் மறக்க முடியாத மனிதர்களில் இவரும் ஒருவர். மாலைமுரசு அலுவலகத்தில் ஒரு வருடம் மட்டுமே பணியாற்றிய போதிலும் கூட இவர் ஏற்படுத்திய தாக்கம் இதோ இப்போது இந்த அஞ்சலியை எழுதும் வரையிலு்ம் கூட வீரியத்துடன் உலவிக் கொண்டுள்ளது. மெஷின்களிடம் வேலையைக் கொடுத்து விட்டு மூளையை தூக்கி மூலையில் போட்டு விட...

எனது அடையாளம் எனது கைகளில்!

 எனது அடையாளம்  எனது கைகளில்! பிறர் செதுக்கிய சிலையல்ல நான் வலிகள் சுமந்து வழிகள் கடந்து நானே செதுக்கிக் கொள்ளும் சுயரூபம்! - யார் இட்ட கோடுகளும் என் எல்லைகளைத் தீர்மானிப்பதில்லை. ஊர் சொன்ன சொல்லுக்குள் என் உலகம் அடங்குவதில்லை. விழுந்த இடங்களே என் வெற்றியின் அஸ்திவாரம்! எழுந்த வேகமே என் சிறகுகளின் அடையாளம்! நேற்றைய தழும்புகள் இன்றைய பாடங்கள்... நாளை நான் யார் என்பதை நானே தீர்மானிப்பேன்!  என் வானம், என் சிறகு, என் பயணம், என் அடையாளம்! சுயபுத்திச் சூரியனில்  சுடர்விடும் தனித்தீ! கூட்டம் சொல்வது பாதையல்ல! நிழல்கள் தருவது வாழ்வல்ல! எரிக்கும் நெருப்பிலும்  எனக்கான சிம்மாசனத்தை  நானே செதுக்குவேன்!

எல்லாவற்றுக்கும் தயாராக இருங்கள்.. நெருக்கடி வந்தால்.. மனம் உடைந்து போகாதீர்கள்!

காலையிலேயே வந்த ஒரு மரணச் செய்தி சோர்வைக் கொடுத்து விட்டது. என்னுடன் பணியாற்றிய, எனது சிஷ்யை தீபாவின் திடீர் மரணம் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 45 வயதில் இயற்கை எய்தியிருக்கிறார். 2 பிள்ளைகள்.. அப்பாவும் இல்லை, இதோ அம்மாவும் கிளம்பி விட்டார்.. வருத்தமாக இருக்கிறது. இங்கு எதுவுமே நிரந்தரம் இல்லை. எதற்குமே உத்தரவாதம் இல்லை. எல்லாற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும். செட்டில் ஆகி விட்டோம்.. நமக்கு எல்லாம் இருக்கிறது என்று எப்போதுமே மனதை ரிலாக்ஸ் ஆக்கி விடாதீர்கள்.. எது வேண்டுமானாலும் நடக்கலாம்.. எப்படி வேண்டுமானாலும் மாறலாம். மாற்றத்தை எப்போதுமே எதிர்பார்த்து இருங்கள். எது நடந்தாலும் தைரியத்தை மட்டும் இழக்காதீர்கள்.. பணம், பொருள், பதவி, உறவுகள் என எது போனாலும் கவலைப்படாதீர்கள்.. நெருக்கடியான நேரத்தில் தளர்ந்து போகாமல், நிதானமாக, பொறுமையாக இருக்க முயற்சியுங்கள். அதுதான் நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை. எதுவுமே முடிவு அல்ல.. எதற்குமே யாருமே முற்றுப்புள்ளி வைக்க முடியாது. ஒவ்வொரு புள்ளியையும் கமா-வாக மாற்றிக் கொண்டு நகர முயற்சியுங்கள். நமக்கான வாய்ப்புகள் நிச்சயம் எங்காவது இருக்கும். நாம்...

வாழ்க்கைப் பயணங்கள்.. எப்போதும் முடிவதில்லை!

வருடங்கள் கூடக் கூட வயதும் ஏறும்.. இது இயற்கை.. ஒவ்வொரு வருடமும் வரும் பிறந்த நாள்.. அத்தனை சந்தோஷம் தரும்.. இளம் வயதில்!. வயது மேலே செல்லச் செல்ல கொண்டாட்டங்கள் தவிர்த்து, அதைத் தாண்டி கவலைகளும், அதன் தாக்கங்களால் ஏற்படும் ஏக்கங்களும் நிரம்பிக் கிடக்கும். என்னைப் பொறுத்தவரை கவலைகளை நான் பெரிதாக தேக்கி வைத்துக் கொள்வதில்லை. எனக்கும் கவலைகள் வரும், சோகங்களும் நிழலாடும்.. வருத்தங்களும் வந்து போகும்.. ஆனால் எல்லோருமே "விசிட்டிங் புரபசர்" போலத்தான்.. வருவார்கள், வந்த வேகத்தில் போய் விடுவார்கள். எனவே எனக்கென்று தனியாக கொண்டாட்டங்களை வைத்துக் கொள்வதில்லை. எல்லா நாளுமே எனக்கு கொண்டாட்டம்தான்.. என்னுடன் இருப்பவர்களின் சந்தோஷமே எனது சந்தோஷமும்.. நான் எப்போதும் உற்சாகமாக இருப்பதன் ரகசியம் இதுதான்! இதுவரை எந்தப் பிறந்த நாளிலும் அடைந்திராத ஒரு சந்தோஷத்தை, உச்சகட்ட மகிழ்ச்சியை இந்த 53வது பிறந்த நாளில் உணர்ந்து, மனசு நெகிழ்ந்து, உற்சாகத்தில் நிரம்பியிருக்கிறது. நிறைய காரணங்கள்.  அதில் ஒரு விஷயத்தை மட்டும் இங்கு பகிர ஆசைப்படுகிறேன். ஒவ்வொருவருக்கும் ஏகப்பட்ட ஆசைகள், கனவுகள் இருக்கும். எனக்க...

ரிஷி சுனாக்.. இந்திய வம்சாவளியா அல்லது பாகிஸ்தான் இந்துவா??!

ரிஷி சுனாக் பிரிட்டன் பிரதமரனாலும் ஆனார்.. அவரை வச்சு ஏகப்பட்ட Claims ஓட ஆரம்பிச்சிருக்கு. இவர் எங்க நாட்டுக்காரர் என இந்தியர்கள் சிலர் ஒரு பக்கம் ஓடிக் கொண்டுள்ளனர். மறுபக்கம் பாகிஸ்தானில், இவர் எங்க நாட்டைச் சேர்ந்த இந்து என்று சிலர் பேச ஆரம்பித்துள்ளனர். இன்னொரு பக்கம் கென்யாக்காரர்கள், அடடே.. இவர் எங்க நாட்டு பூர்வீகமாச்சே என்று புன்னகை சிந்திக் கொண்டுள்ளனர். The World Is a Global Village.. உண்மைதான்.. இன்று சாதாரணமாக, ஜனங்களோடு ஜனமாக தெருவில் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு இளைஞர் சில பத்தாண்டுகளுக்குப் பிறகு வேறு ஒரு நாட்டில் செட்டிலாகி எதிர்காலத்தில் அந்த நாட்டுக்கே அதிபராகும் நிலை வரலாம்.. இதெல்லாம் ஒரு காலத்தில் சிரித்துக் கடந்து விடக் கூடிய கற்பனையாக இருந்திருக்கலாம்.. ஆனால் இன்று அது சாத்தியம். அதைத்தான் தற்போது நாம் கண்டு கொண்டிருக்கிறோம். அமெரிக்க அதிபராக ஒபாமா வந்தபோது அதுதான் நடந்தது. அவரது பெற்றோரின் பூர்வீகம் ஆப்ரிக்கா. அதேபோல கமலா ஹாரிஸ் அமெரிக்க வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதியபோதும் அதுதான் நடந்தது. அவரது பூர்வீகம் இந்தியா, ஜமைக்கா என்று விரிவடைந்தது. இன்று ரிஷி சுன...

புத்தகம் சரியா.. இல்லை.. ."பொத்தகம்" சரியா.. வாங்க வாசிக்கலாம்!

ஒரு டிவீட் பார்க்க நேர்ந்தது.. போட்டிருந்தவர் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன். அது ஒரு புத்தக வெளியீட்டு விழாவுக்கான அழைப்பிதழ்.. அதில் இடம் பெற்றிருந்த வாசகம்.. "பொத்தக வெளியீட்டு விழா".. பெரும்பாலும் புத்தக வெளியீட்டு விழா, நூல் வெளியீடு என்றுதான் பார்த்திருப்போம்.. இது வித்தியாசமாக பட்டது (எனக்கு அல்ல).. பொத்தகம் சரியா.. புத்தகம் சரியா என்ற வாதமும் கூடவே நினைவுக்கும் வந்தது. அதுதொடர்பான ஒரு விளக்க கட்டுரை (ரொம்ப குட்டிதான்.. தைரியமா படிங்க).. நினைவுக்கு வந்தது.. நாலு பேருக்கு உபயோகமாக இருக்குமே என்பதற்காக இதோ அது..! எழுதியவர்: எழுத்தாளர் சி.வி. ராஜன் பொத்தகம் தான் உண்மையான தமிழ் என்று சொந்தத் தகுதியில் நான் பொத்து --> பொத்தகம் என்று வந்தது என்று நீண்ட விளக்கம் கொடுத்தால் என் பதிலுக்கு ஆதரவு வாக்குகள் எகிறும்; ஆனால் 'புஸ்தக்' என்பதிலிருந்து புத்தகம் வந்தது, பொத்தகம் என்பது புத்தகத்தின் கொச்சை மொழி என்றால் இங்கே எதிர் வாக்கு போடுபவர்கள் உண்டு! எனவே நானும் பொத்திக்கொண்டிருக்காமல் , என் புத்திக்கெட்டிய விளக்கத்தை 'பொத்து' என்பதிலிருந்தே ஆரம்ப...

NDTV: தபலா உருட்டலும்.. தழுவிச் சென்ற அழகு ஆங்கிலமும்.. பிரணாய் என்றொரு பிரமிப்பு!

80களின் காலகட்டம்.. அத்தனை இந்தியர்களையும் ஒரு டிவி புரோகிராம் கட்டிப் போட்டு வைத்திருந்தது.. 80ஸ் கிட்ஸ்களுக்கு மறக்க முடியாத டிவி பொற்காலம் என்றால் அதுதான்.. தூர்தர்ஷன் என்ற ஒற்றை டிவி பொழுது போக்குக்குள் உழன்று கொண்டிருந்த அக்காலகட்டத்து இந்தியர்களுக்கு ஒரு ஸ்வீட் சர்ப்பிரைஸாக வந்து சேர்ந்த நிகழ்ச்சிதான்.. The World This week.. இன்று வரை அந்த நிகழ்ச்சி கொடுத்த சுவாரஸ்யத்தையும், அனுபவத்தையும், திரில்லையும் வேறு எந்த டிவி நிகழ்ச்சியும் கொடுத்ததாக எனக்கு நினைவில்லை. எப்படி ஒளியும் ஒலியும் பார்க்கக் கூட்டமாக கூடி அமர்ந்தோமோ.. அதேபோல வாராவாரம் இந்த நிகழ்ச்சிக்காக வீடுகள் தோறும் ராத்திரி 9 மணிக்கு விழாக் கோலம் பூண்டிருக்கும். ஆங்கிலம் தெரிகிறதோ இல்லையோ.. டிவி முன்பு தவறாமல் உட்கார்ந்து விடுவார்கள்.. "அறிவா.. ஷோ ஆரம்பிக்கப் போகுது.. வேகமா வா.." என்று எனது அண்ணன் அழைக்கும் குரல் இன்றும் கூட காதுகளில் ரீங்காரமிடுகிறது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பே டிவி முன்பு செட்டிலாகி விடுவோம்.. நிகழ்ச்சியின் தீம் மியூசிக்கே ஒரு திரில்லான அனுபவமாக இருக்கும்.. அந்த தபலா உருட்ட...

அருமையான பிள்ளைகளும், அழகான அப்பாக்களும்.. கண்ணில் கண்ட சந்தோஷம்!

அஸ்வின் குட்டிப் பையனாக இருந்த கால கட்டம்.. ஒரு புதுக் கவிதை போல இருக்கும் அந்த நாட்கள்.. பிள்ளைகளை தூக்கி வளர்ப்பதும், அதில் கிடைக்கும் சுவாரஸ்ய அனுபவங்களும் எல்லாத் தந்தைக்கும், தாய்க்கும் கிடைக்கும் இயல்பான வரம்தான்.. ஆனால் எனக்கு கிடைத்த அனுபவங்கள் எல்லாமே மிக மிக சிறப்பானவை.. காரணம் எனது மகன் சூப்பர் ஸ்பெஷல் என்பதால். அஸ்வின் வாய் திறந்து பேசியபோது சொன்ன முதல் வார்த்தை அப்பாதான்.. வழக்கமாக குழந்தைகள் அம்மா  அல்லது அத்தை என்றுதான் பேச ஆரம்பிக்கும் என்பார்கள்.. ஆனால் "ப்பா".. என்றுதான் அவனது முதல் பேச்சு தொடங்கியது.. அதிலும் அவனது உச்சரிப்பும் விசேஷமாக இருக்கும்.. "ppa" என்று சொல்ல மாட்டான் "bba" என்றுதான் உச்சரிப்பான்.. அந்த டிரேட் மார்க் புன்னகையும் கூடவே விரியும்.. பார்க்கப் பார்க்க அத்தனை அழகாக இருக்கும்.. கலர்ஃபுல் ஓவியம் போல... இப்ப "போ போ" என்கிறான்.. அது தனிக் கதை! சின்ன வயதில் அவனிடம் நான் நிறைய பேசுவேன்.. அவனும் சளைக்காமல் கேட்பான்.. ஏதாவது கதை ஓடிட்டே இருக்கும்.. பெரும்பாலும் என்னோட குடும்பக் கதைதான்.. என்னுடைய குடும்பத்தில் நடந்த எ...

கடுவா.. "புலி" முருகனை பார்த்து சூடு போட்டுக் கொண்ட பிருத்விராஜ்!

வாஞ்சிநாதன் என்று ஒரு படம் வந்ததே நினைவிருக்கிறதா.. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.. மறக்க முடியாத படம்... படத்தைப் பார்த்து விட்டு மண்டையெல்லாம் மரத்துப் போய் வியர்க்க விறுவிறுக்க வெளியேறி வந்தது இன்னும் மனதில் நிழலாடுகிறது. படத்தின் ஹீரோ விஜயகாந்த்.. அப்படின்னாலே அந்தப் படத்தில் கதையை விட, கைக்கும், காலுக்கும்தான் அதிகம் வேலை இருக்கும் என்பது எழுதப்படாத விதி. வாஞ்சிநாதன் மட்டும் விதி விலக்காக இருக்க முடியுமா.. பெங்களூரில் ஒரு தியேட்டரில் செகன்ட் ஷோ பார்க்கப் போய் எப்படா தியேட்டரை விட்டு ஓடுவோம் என்று அப்போது அடைந்த பீதியை இப்போது நினைத்தாலும் அதே பீதி உணர்வு பீய்ச்சி அடிக்கிறது. படம் முழுக்க ஒரே அடிதடிதான்.. அடித்து அடித்து விஜயகாந்த்துக்கே போரடித்துப் போயிருக்கும். அப்படி விடாமல் வெளுத்தெடுத்த படம்தான் வாஞ்சிநாதன். படம் முழுக்க பாத்திரக் கடைக்குள் புகுந்த யானை போல போட்டுப் புரட்டி புரட்டி அடித்துக் கொண்டிருப்பார் விஜயகாந்த்.. அந்தப் படத்தை எடுத்தவர்தான் ஷாஜி கைலாஷ்..  90களின் மசாலா பட மன்னன்.  ஷாஜி கைலாஷ் படம் என்றாலே ஒரே அடிதடியாகத்தான் இருக்கும். சண்டைக்குப் பஞ்சம் இருக்கா...

"தமிழுக்கும்.. இசை"க்கும்.. இன்று பிறந்த நாள்!

 ஒருபக்கம் இசைஞானி இளையராஜா.. இன்னொரு பக்கம் தமிழிசை செளந்தரராஜன்.. இருவருக்கும் இன்று பிறந்த நாள்.. இரு வேறு ஆளுமைகள்.. மறக்க முடியாத திறமைகள்.. அசைக்க முடியாத தனித்துவங்கள்.. ஒவ்வொருவரும் இன்று கொண்டாடப்படுகின்றனர். ஒவ்வொரு தமிழ் நெஞ்சத்தின் அடி ஆழத்திலிரும் உறைந்து போய் நிற்பவர் இளையராஜா.. அவரின்றி ஒரணுவும் அசையாது என்றுதான் சொல்ல வேண்டும். வெவ்வேறு வயதுகளில் ஒவ்வொருவரும் இருந்தாலும், ஒவ்வொருவரின் அடி மனதின் ஓரத்திலும் அவரது இசை இல்லாமல் இருக்காது. காதல், சோகம், காமம், வேகம், விவேகம், குடும்பம், அம்மா, தந்தை, நட்பு, அன்பு, அமைதி, ஆர்ப்பாட்டம், அழுகை.. என எல்லா சூழலுக்கும் நமக்குத் தேவைப்படுவது இளையராஜா என்ற அந்த மருந்துதான். அது இல்லாமல் நமது மனதின் எந்த நோயும் குணமாவதில்லை.  இளையாராஜா என்பது இசை மட்டுமல்ல.. அது ஒரு போதை.. ஒருமுறை அதைத் தொட்டு விட்டால், பிறகு விடவே முடியாது.. ஆனால் இந்தப் போதை மனசுக்கு நல்லது.. மூளைக்கு நல்லது.. உயிர் வாழ்வதற்கு ரொம்பத் தேவையானதும் கூட. இளையராஜாவின் இசை முன்னாடி மாதிரி இல்லை என்று சொல்பவர்களும் உண்டு. ஆனால் அவர்கள் உண்மையான இளையராஜாவின் இசை...

கருணாநிதி உண்மையிலேயே கொடுத்து வச்சவர்தான்.. ஆனால் ஜெயலலிதா?!

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அடுத்தடுத்து கெளரவங்கள் சேர்ந்து கொண்டே போகின்றன. இதையெல்லாம் பார்க்கும்போது அவரைப் போலவே தமிழக மக்களால் மறக்க முடியாத இன்னொரு தலைவரான ஜெயலலிதா நம் கண் முன்பு வந்து போகிறார். கருணாநிதிக்குக் கிடைத்த கெளரவங்கள் ஜெயலலிதாவுக்கு கிடைக்கவில்லை என்பதை வருத்தத்தையே ஏற்படுத்துகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை சில தலைவர்களை அத்தனை சீக்கிரம் மக்கள் மறக்க முடியாது, மறக்கக் கூடாது. அந்த வரிசையில் காமராஜர், அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் நிரந்தரமாக நீடித்து நிற்பார்கள். இவர்கள் யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் கிடையாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தமிழ்நாட்டுக்காகவும், தமிழ்நாட்டு மக்களுக்காகவும் நிறைய செய்துள்ளனர், மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர். இவர்கள் மறைந்தபோது அடுத்து வந்த தலைவர்கள், மறைந்த தலைவர்களை முறையாக கெளரவப்படுத்தியுள்ளனர். காமராஜர் மறைந்த பிறகு அவரை அடுத்து வந்த தலைவர்கள் உரிய முறையில் கெளரவப்படுத்தியுள்ளனர். காமராஜ் பெயரில் பல்கலைக்கழகம் உள்ளது. காமராஜர் பெயரில் பஸ் நிலையங்கள் உள்ளன. அதேபோல அண்ணாவுக்கு செய்யப்பட்ட கெளரவங்களின் பட்டிய...

"பெண்கள் சமைக்கத்தான் லாயக்கு".. பாட்டீல்கள் இப்படித்தான்!

"நீங்கெல்லாம் எதுக்கு அரசியல்ல இருக்கீங்க..  வீட்டுக்குப் போய் சமையலைப் பாருங்க"   தேசியவாத  காங்கிரஸ் எம்பி சுப்ரியா சூலேவைப் பார்த்து இப்படிப் பேசியிருக்கிறார் மகாராஷ்டிர பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல். இது அந்த மாநிலத்தில் மட்டுமல்லாமல் தேசிய அளவில் சர்ச்சையாக மாறியுள்ளது. பெண்களை இந்த அளவுக்கு தரம் தாழ்த்தி பாஜக தலைவர் விமர்சிக்கலாமா, இப்படி ஒரு வெறித்தனமான ஆணாதிக்கப் புத்தியுடன் கூடியவர் பாஜகவின் மாநிலத் தலைவராக இருக்கலாமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால் நான் பேசியதன் அர்த்தம் வேறு.. கிராமத்தில் வழக்கமாக  சொல்லும் வார்த்தையைத்தான் பயன்படுத்தினேன்.. அதை அப்படியே அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது என்று சப்பைக் கட்டுக் கட்டியுள்ளார் பாட்டீல். நாட்டில் ஒரு பாட்டீல் மட்டும் இல்லை.. ஏகப்பட்ட பேர் இதே பொதுப் புத்தியுடன்தான் இருக்கிறார்கள். பெண்கள் எந்த வகையிலும் வளர்ந்து விடக் கூடாது.. அப்படியே வளர்ந்து வந்தால் அவர்களது கேரக்டரை சிதைத்துப் பேசுவது, கிண்டலடிப்பது, யாராவது பெண் தலைவரை விமர்சிக்க வேண்டும் என்றால் "செக்ஸிஸ்ட்" வார்த்தைகளைப் பயன்படுத்துவது... அவரது...

உடல் களைத்தாலும்.. உயிர் சலிக்கவில்லை.. இதுதான் "அற்புதம்"!

ஒரு பெண்ணால் என்ன செய்து விட முடியும்.. நிறைய பேரிடம் இந்த இளக்காரமான கேள்வியும், பார்வையும் இந்தக் காலத்திலும் கூட பற்றிக் கிடப்பதைப் பார்க்க முடியும்.. ஆனால் ஒரு பெண்ணாக, ஒற்றை மனுஷியாக, முழுக்க முழுக்க தாய்மை என்ற ஒரே ஆயுதத்துடன்.. அந்தத் தாய்ப் பாசம் கொடுத்த உந்துதலை மட்டும் துணையாகக் கொண்டு, விடாப் பிடியாக, வைராக்கியத்துடன் போராடி தன் மகனை மீட்டுக் கொண்டு வந்து சிறை அறையை விட "கரு"வறையே உயர்ந்தது என்பதை நிரூபித்திருக்கிறார் அற்புதம் அம்மாள். அறிவு விடுதலையில் எல்லோரையும் விட, மிகப் பெரிய பாராட்டுக்குரியவர் அற்புதம் அம்மாள்தான். இப்படி ஒரு தீரத் தாயை வரலாற்றில்தான் நாம் படித்துள்ளோம். இன்று நிஜமாகவே பார்த்து விட்டோம்.. அறிவு சிறைக்குள் போன நிமிடத்திலிருந்து தொடங்கியது அற்புதம் அம்மாளின் கண்ணீர்ப் போராட்டம். என் மகன் என்ன தவறு செய்தான்.. ஒரு பேட்டரி வாங்கிக் கொடுத்தது குற்றமா என்ற குமுறலுடன் வெடித்துக் கிளம்பினார் அந்தத் தாய். நடந்த சம்பவங்களை யாரும் நியாயப்படுத்தவில்லை, நியாயப்படுத்தவும் முடியாது.. ஆனால் "என் மகன்.. என் ரத்தம்.. என் உயிர்.. என் பிள்ளை" என்ற உணர்...

"தைரியம்தான் சார் என்னோட பலமே..".. உலாப் போகும் உணர்வுகள் (15)

ஒரு நீண்ட மருத்துவமனை வாசம். இதுவரை அனுபவித்திராத உணர்வுகள்.. இதுவரை கண்டிராத அனுபவங்கள். ஒரு சாதாரண நபராக இல்லாமல், எனது அனுபவங்களை நான் எல்லோருக்கும் பதிவு செய்ய முக்கியக் காரணம்.. சில விஷயங்களைச் சொல்லத்தான். அரசு மருத்துவமனைகள் மீது பலருக்கும் இன்னும் நம்பிக்கை இல்லை, பயம் இருக்கிறது. ஆனால் அத்தனையையும் பொய் என்று சொல்ல வைத்து விட்டது எனது இந்த மருத்துவமனை அனுபவம். மருந்து வாசனையே இல்லாத அரசு மருத்துவமனையை இப்போதுதான் பார்க்கிறேன். அத்தனை சுத்தம். அருமையான டாக்டர்கள்.. பரிவு காட்டும் செவிலியர்கள்.. தேவையில்லாமல் மருந்துகளைப் போட்டு கஷ்டப்படுத்துவதில்லை. தேவையில்லாமல் எந்த விஷயத்தையும் செய்வதில்லை. எல்லாவற்றிலும் நிதானம், பக்குவம் காட்டுகிறார்கள். . பல விஷயங்களை மனது அசை போட்டுப் பார்க்க இந்த அனுபவம் உதவியது. அனுபவங்கள்தான் நமக்கு ஆசான். அனுபவம் பெறாத மனிதன் என்னைப் பொறுத்தவரை அரை மனிதன்தான். நல்லதோ கெட்டதோ எதையும் உணர்ந்து தெளிந்தால்தான் ஒருவருக்கு முழுமை கிடைக்கும். எந்த அனுபவமாக இருந்தாலும் அதிலிருந்து பாடம் கற்பதும் கற்ற பாடத்திலிருந்து நம்மைத் சரி செய்து கொள்வதும்  மிக முக்...

"என்னப்பா கிளம்பிட்டியா".. உலாப் போகும் உணர்வுகள் (14)

இன்னும் ஒரு புத்தம் புது காலை.. இதமான குளிருடன்.. ஜில்லென்ற உற்சாகத்துடன்.. 7வது நாளின் காலையை வரவேற்றான் ஆதவன். இத்தனை நாட்கள் ஒரு மருத்துவமனையில் தங்கியது இதுவே முதல் முறை.. இனி மேல் இப்படி ஒரு நிலை வரக் கூடாது.. எனக்கு மட்டுமல்ல.. யாருக்குமே என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான் ஆதவன்.. அன்று காலை அருமையான டிபன்.. அவனுக்குப் பிடித்த உப்புமா, சட்னியுடன். உப்புமா என்றால் அவனுக்கு ரொம்பப் பிரியம். பலரும் உப்புமாவைப் பார்த்தால் போட்டது போட்டபடி தலை தெறிக்க ஓடுவார்கள்.. ஆனால் இவனுக்கோ உப்புமா என்றால் வாயில் நீர் ஊற ஆரம்பித்து விடும். மதுரை பக்கம் உப்புமாவை சர்க்கரை தொட்டுத்தான் சாப்பிடுவார்கள். ஆனால் சில காலம் பெங்களூரில் இருந்தபோது, அங்கு உப்புமாவை தேங்காய் சட்னி தொட்டு சாப்பிட்டுப் பழகி.. இப்போது சட்னியுடன்தான் உப்புமாவை சாப்பிட முடிகிறது.  நர்ஸ் வந்து வழக்கமான செக்கப்பை செய்தார்.  "எப்பம்மா டிஸ்சார்ஜ் பண்ணுவாங்க" "மதியம் சீஃப் டாக்டர் வந்ததும் பண்ணிடுவாங்கப்பா" "ஓகேம்மா" வீட்டுக்குப் போன் செய்து சொல்லியாச்சு. துணிமணிகளையும், இதர பொருட்களையும் எடுத்து அடுக்...

"முடக்கிப் போட்டு பாடம் கத்துக் கொடுக்கும் பாருங்க".. உலாப் போகும் உணர்வுகள் (13)

சீஃப் டாக்டர் வரும் நேரம்.. வயிறு பசிக்க ஆரம்பித்து விட்டது. ஆனால் டாக்டர் வரும் நேரத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் சரியாக இருக்காது என்பதால் பொறுத்திருந்தான். சரியாக 1 மணிக்கெல்லாம் டாக்டர் ரவுண்ட்ஸ் ஆரம்பித்து விடும்.. இன்றும் அதேபோல டாக்டர் வந்தார். அந்தக் காரிடாரில் பெரும்பாலான அறைகள் காலியாகி விட்டதால் சீக்கிரமே ஆதவனின் அறைக்கு டாக்டர் வந்து விட்டார். "எப்படி இருக்கீங்க.. நல்லாருக்கீங்களா" "நல்லாருக்கேன் டாக்டர்" அருகில் இருந்த டூட்டி டாக்டர் சீஃப் டாக்டரிடம் "இவருக்குத்தான் பிளேட்லெட் கவுன்ட் கம்மியா இருந்துச்சு. இப்ப நார்மல்னு ரிப்போர்ட் வந்திருக்கு டாக்டர்" "ஓ.. தென் குட்.. டேக் கேர்" டாக்டர் நகர அவருடன் வந்தவர்கள் பின் தொடர்ந்தனர். "பிளேட்லேட் நார்மல்".. ஆஹா இதைக் கேட்கவே எவ்வளவு சுகமாக இருக்கு.. மனசு லேசானது... ஓகே. பொட்டியைக் கட்ட வேண்டியதுதான் என்று மனசுக்குள் உற்சாகம் பிறந்தது. முதல்ல சாப்பிடலாம்.. பசி வயித்தைக் கிள்ளுது.. எடுத்து வைத்த கொஞ்ச நேரத்தில் டூட்டி டாக்டர் வந்தார். "சார்.. உங்களுக்கு நார்மல் ஆயிருச்சு. ஒர...

"இல்லை சார்.. தப்பு.. வாங்கக் கூடாது" ... உலாப் போகும் உணர்வுகள் (12)

5 மணிக்கே விழிப்பு வந்து விட்டது..  இன்றோடு வந்து ஆறு நாட்களாகி விட்டது. எப்படா வீட்டுக்குப் போவோம் என்று தோன்ற ஆரம்பித்து விட்டது. மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தது முதலே பெரிய அளவில் எந்தப் பிரச்சினையும் வரவில்லை. சில நேரம் மூச்சு விட கஷ்டமாக இருந்தது. கையோடு கொண்டு வந்திருந்த இன்ஹேலரை எடுத்துக் கொண்டான். சில நேரம் தொண்டை வறட்சி இருந்தது, பெரிதாக வலி இல்லை. எனவே அதைக் கண்டு கொள்ளவில்லை. சில நேரம் கண்ணில் வலி, தலைவலி இருந்தது, பேராசிட்டமால் போட்டுக்கச் சொல்லி விட்டார்கள், இவ்வளவுதான். இதைத் தாண்டி பெரிதாக எந்தப் பிரச்சினையும் வரவில்லை. எல்லாவற்றுக்கும் எளிமையான வைத்தியம்தான். அதைத் தாண்டி டாக்டர்களும் பெரிய அளவில் மருந்துகள் தரவில்லை, தேவைப்படவில்லை என்பதே உண்மை. இன்று அந்த பிளட் டெஸ்ட் சோதனை வந்து விடும். அது மாலைக்கு மேல்தான் தெரியும். அதில் நார்மல் என்று வந்து விட்டால் கிளம்பி விடலாம் என்று நினைத்துக் கொண்டான். அப்பாடா வீட்டுக்குப் போகும் நேரம் வந்து விட்டது என்பதே ஒரு ஆறுதலாக இருந்தது. என்னதான் மருத்துவமனை வசதியாக இருந்தாலும், மனித நேயம் மிக்கவர்கள் கையில் நாம் பாதுகாப்பாக இருந்...