Skip to main content

Posts

Showing posts from October, 2021

தூக்கத்துக்குள் மெல்ல நழுவி.. அந்த நொடி இருக்கே.. சொர்க்கம் சார்!

சாப்பிட்டு அப்பத்தான் உட்கார்ந்திருப்போம்.. அப்படியே கண்கள் சொருகி.. மெல்ல தூக்கத்துக்குள் விழும் அந்த நொடி இருக்கே.. சொர்க்கம் சார்! நிறையப் பேருக்கு இந்தப் பழக்கம் இருக்கும்.. சாப்பிட்டு முடித்ததும் ஒரு குட்டித் தூக்கம் போட்டால்தான் அந்த நாளின் மதியம் முழுமை பெறும். கை கால்களை நீட்டி படுக்கக் கூட வேண்டாம்.. அப்படியே சேரில் சாய்ந்தபடி கண்களை அரைகுறையாக மூடி ஒரு மிதப்பு நிலையில் வரும் அந்தத் தூக்கம் இருக்கே.. அதை அனுபவிக்காவிட்டால் எப்படிங்க...! எனக்கெல்லாம் சாப்பிட்டு கொஞ்ச நேரத்திலேயே லைட்டாக கண்ணைக் கட்ட ஆரம்பிக்கும்.. அதுவும் அலுவலகத்தில் வரும் அந்த அரைகுறை கோழித் தூக்கம் இருக்கே.. பல முறை பாஸ் கண்ணில் பட்டு சிரித்து நழுவிய தருணங்களை மறக்க முடியாது..! சில நிமிடங்களுக்கு முன்பு சக்திவேல் சாரின் ஞாபகம் வந்தது. அருமையானவர். கதை பேசினால் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.  கதை கேட்கும்போது யாருக்காவது தூக்கம் வந்தால் அவரை டிஸ்டர்ப் செய்யவே மாட்டார். கடிந்து கொள்ள மாட்டார். அப்டியே தூங்கட்டும் தொந்தரவு செய்யாதே என்று அன்பாகச் சொல்வார். விழித்து எழுந்துதம், தூங்கிய நபருக்கு தான் அதுவரை பேசியதை,

ரஜினிகாந்த் என்றொரு பிராண்ட்!

இந்தியத் திரையுலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதா சாஹேப் பால்கே விருதை நாளை பெறுகிறார் ரஜினிகாந்த்.. பள்ளிக்காலத்தில் ரஜினி ரசிகர்கள் ஒரு பக்கமும், கமல் ரசிகர்கள் மறுபக்கமுமாக பிரிந்து நின்று மல்லுக்கட்டிய காலம் நினைவுக்கு வருகிறது. ரஜினி படம் வரும்போதெல்லாம் வகுப்பில் ஒரு பரவசமும், பரபரப்பும் கூடி விடும். முதல் நாள் முதல் ஷோ பார்க்க ரஜினி ரசிகர்கள் கச்சைக் கட்டிக் காத்திருப்பார்கள். அவர்களை கேலி செய்து கிண்டலடிக்கும் கமல் ரசிகர்கள் கூட்டம். இரு தரப்புக்கும் இடையே பலமுறை சண்டைகள் மூள்வதுண்டு. அடிதடியுடன் கடக்கும் மாலை நேரங்கள்தான் அப்போது அதிகம். சில நேரங்களில் ரத்தக் காயங்கள் வரை போய் விடுவதும் உண்டு.  நான் அப்போது இருவருக்குமே ரசிகன் இல்லை என்பதால் இந்த சண்டையை ஓரமாக நின்று வேடிக்கை பார்ப்பதோடு சரி. ரஜினி படம் என்றால் அப்போதெல்லாம் ஒரு திருவிழா  ஃபீலிங்தான் ரசிகர்களுக்கு (இன்று வரை அது தொடர்வது ஆச்சரியமானது). முன்பெல்லாம் தியேட்டர்களில் மட்டுமே படம் பார்க்க முடியும் என்பதால் ஒவ்வொரு படமும் சில்வர் ஜூப்ளியை தொடாமல் தியேட்டரை விட்டுப் போனதே இல்லை.. பெரும்பாலான ரஜினி படங்களுக்கு இ

ஜோசப் ஜார்ஜ் என்கிற ஜோஜு ஜார்ஜ் என்றொரு (நடிப்பு) அரக்கன்!

முடிந்தவரை போராடு என்பதெல்லாம் இவரது அகராதியில் கிடையாது.. அடையும் வரை போராடு என்பதே இவரது மந்திரம். ஜோஜு ஜார்ஜின் வெற்றிக்கு இந்த அடிப்படை ஆவேசம்தான் முக்கியக் காரணம். மலையாள சினிமாவுக்கு ஒரு நல்ல அதிர்ஷ்டம் உண்டு. நல்ல நல்ல கலைஞர்கள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருப்பார்கள். புதுப் புது முயற்சிகளை அவர்கள் தந்து கொண்டே இருப்பார்கள்.. அவர்களுக்கு வெற்றி கிடைக்கும் வரை விடாமல் முயன்று கொண்டே இருப்பார்கள் - படம் ஓடுதோ இல்லையோ அதைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்பட மாட்டார்கள்- வெற்றி வந்த பிறகும் கூட அவர்களது சோதனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். மலையாள சினிமாவின் மலைக்க வைக்கும் ஆரோக்கிய வளர்ச்சிக்கு இதுதான் அடிப்படை காரணம். ஜோஜு அப்படிப்பட்ட ஒரு கலைஞர்தான். இவரது திரைத்துறை வளர்ச்சி என்பது ஆச்சரியம் அளிக்கக் கூடியது. அலட்டிக் கொள்ளாத நடிப்பு, சக கலைஞர்களுக்கு ஈடு கொடுத்து அவர்களது நடிப்பையும் தூக்கி விடும் அசாத்தியம், சோதனை முயற்சிகளுக்கு கொஞ்சம் கூட தயக்கம் காட்டாத தன்மை, தோல்வி வெற்றியை தலைக்கு கொண்டு போய் அடைத்துக் கொள்ளாமல் தொடர்ந்து நல்ல நடிப்பை  தருவது, சின்ன ரோலாக இருந்தாலும் அதில் தாக்

புடம் போட்ட "தங்கம்"... இந்த மேரி!

குப்பையில் கிடந்த தங்கத்தை எடுத்து போலீஸில் ஒப்படைத்து தான் அந்த தங்கத்தை விட பல மடங்கு உயர்ந்தவர் என்பதை நிரூபித்துள்ளார் மேரி என்ற பெண்மணி. நேர்மைன்னா கிலோ என்ன விலை என்று கேட்கும் இக்காலத்தில், குறுக்குப் புத்தியுடன் மட்டுமே அலையும் மனிதர்கள் நிறைந்து விட்ட இந்தக் காலத்தில் பசும் பொன்னாக மிளிர்ந்து நிற்கிறார் திருவொற்றியூர் மேரி. மேரி ஒரு தூய்மைப் பணியாளர். சென்னை திருவொற்றியூர் அண்ணாமலை நகர் பகுதியில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் துப்புறவுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஒரு கவர் கிடந்ததைக் கண்டார். அதைப் பார்த்தால் குப்பை போலத் தெரியவில்லை. இதனால் சந்தேகப்பட்டுப் பிரித்துப் பார்த்தால் அதில் தங்க நாணயம் இருந்துள்ளது. உடனடியாக சற்றும் மனம் சலனப்படாமல் அந்த பாக்கெட்டுடன் காவல் நிலையத்திற்குப் போய் போலீஸாரிடம் இது குப்பையில் கிடந்தது என்று கொடுத்துள்ளார். அதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட போலீஸார், மேரியின் நியாயமான, நேர்மையான மனதைப் பாராட்டினர். பின்னர் விசாரணையில் அது கணேச ராமன் என்பவருக்குச் சொந்தமானது என்று தெரிய வந்து அவரிடம் ஒப்படைத்தனர். மேரிக்கு இப்போது பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன

நானும் ஒரு நாள் ராசி பலன் எழுதினேன்!

நாளிதழ்களில் வரும் ராசி பலன்களை நான் பொழுது போக்காக பார்ப்பது வழக்கம்.. அதன் மீது ஆழ்ந்த நம்பிக்கையெல்லாம் கிடையாது. சில ஜோதிடர்கள் எழுதும் வார்த்தைகள் படிக்க சுவாரஸ்யமாக இருக்கும்.. அந்த சுவாரஸ்யத்திற்காக படிப்பேன்.. அவ்வளவுதான். இப்போதெல்லாம் சுயேச்சையான ராசி பலன்கள் அதிக அளவில் வருகின்றன. முன்பெல்லாம் முக்கியமான நாளிதழ்களில் மட்டும்தான் ராசி பலன் வரும். அதுவும் பிரபலமான ஜோதிடர்கள்தான் எழுதுவார்கள். அதற்கு பெரிய ரசிகர் கூட்டமே உண்டு. தினதந்தி, தினமலர் என முக்கியமான நாளிதழ்களில் வரும் ராசிபலன் படிக்க பெரும் கூட்டமே இருக்கும். ஜோதிடம் என்பதே ஒரு கணக்குதான். அதை சரியாக கணிப்பவர்கள் வெகு சிலரே.. அப்படிப்பட்டவர்கள் சொல்வதுதான் கிட்டத்தட்ட சரியாக இருக்கும்.  அதில் ஒருவர்தான் நம்புங்கள் நாராயணன் (இப்போது மறைந்து விட்டார்).. இவரது பலன்களைப் படிக்க பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கும். பல விஷயங்கள் நமக்கு நடப்பது போலவே இருக்கும் (அந்த பாசிட்டிவிட்டி மட்டும்தான் எனக்குப் பிடிக்கும்). நம்புங்கள் நாராயணன், ஒரு நியூமராலஜிஸ்ட். பெரிய பெரிய விஐபிகள் எல்லாம் இவரது கஸ்டமர்களாக இரு

தமிழர்களின் சினிமா தாகம் தீர்த்து வைத்த கே டிவி

கே டிவிக்கு 20 வயதாகிறது.. நேற்றுதான் ஆரம்பித்தது போல இருக்கிறது.. அதற்குள் 20 வயதைத் தொட்டுள்ளது. தமிழ்நாட்டு மக்களின் திரை ரசனைக்கு பெரும் தீனி போட்ட பெருமை கே டிவிக்கு நிச்சயம் உண்டு. தமிழ் திரை ரசிகர்களின் வாழ்க்கையை மாற்றிப் போட்டதிலும் பெரும் பங்குண்டு  கே டிவிக்கு. முன்பெல்லாம் தியேட்டருக்குப் போக வேண்டும் அல்லது கேசட் வாங்கிப் போட்டுப் பார்க்க வேண்டும் என்ற நிலைதான். அதை விட முக்கியமாக தியேட்டருக்குக் குடும்பத்துடன் போக வேண்டும் என்றால், டிக்கெட் செலவு, நொறுக்குத் தீனி செலவு, போக்குவரத்து செலவு என 500 ரூபாயாவது எடுத்து வைத்தாக வேண்டும்.  இந்த இடையூறுகளை எல்லாம் துடைத்துப் போட்டு சினிமா பார்க்கும் அனுபவத்தை மிக மிக இலகுவான ஒன்றாக மாற்றியது கே டிவி. சினிமா பார்ப்பதை சாதாரண விஷயமாக மாற்றிப் போட்டது கேடிவி. இந்த  சானல் வந்த புதிதில் திரையுலகின் கடும் அதிருப்திகளையும் சம்பாதிக்கத் தவறவில்லை. ஆனால் அதையும் கூட சன் குழுமம் லாவகமாக சமாளித்தது.. கடைசியில் திரையுலகின் அன்பையும், ஆதரவையும் பெற்று கேடிவியின் வளர்ச்சி பல படி மேலே உயர்ந்தது. கே டிவி வந்த பிறகுதான் தொலைக்காட்சிகளில் சினிமா பா

நீ ஒரு காதல் சங்கீதம்.. 34 வயசு "நாயகன்"!

நாயகன் படத்துக்கு இப்போது 34 வயசு.. அப்ப எனக்கு 16 வயசு..  ஊரெங்கும் இந்தப் படம் குறித்துதான் பேச்சு. கமல்ஹாசனின் நடிப்பையும், இளையராஜாவின் இசையையும் மெச்சிப் பேசாத வாய்களே இல்லை. எங்கெங்கிலும் இந்தப் படம் குறித்த விரிவான விவாதங்களைத்தான் கேட்க முடிந்தது. என்  அண்ணன் இந்தப் படத்துக்குக் கூட்டிப் போயிருந்தார். படத்தைப் பார்த்தது முதல் எனக்கு சில நாட்களுக்கு எதுவுமே ஓடவில்லை. இளையராஜாவின் இசையில் கட்டுண்டு கிடந்த காலம் அது. கமல்ஹாசனின் நடிப்பென்றால் ஓடி ஓடிப் போய்ப் பார்த்த காலம். இருவரும் இணைந்த படம் என்றால் எப்படி இருக்கும். சீன் பை சீனாக எனது சக நண்பர்களுடன் தெரு முனையில், வீடுகளில், பள்ளியில் என மாற்றி மாற்றி விவாதித்த அந்த நாட்கள் இப்போது நினைவுக்கு வருகிறது. நாயகன் மாபெரும் வெற்றி பெற என்ன காரணம்...? படம் முழுக்க இசையில் வித்தை செய்திருப்பார் ராஜா. இப்படி ஒரு இசையா என்று மெய் சிலிர்க்கப் பேசியவர்கள்தான் அன்று அதிகம் (விகடன் தந்த அந்த மோசமான விமர்சனத்தைத் தவிர). படத்தின் முதல் காட்சியிலிருந்து கடைசி சீன் வரை இளையராஜாவின் இசைதான் படத்தை நகர்த்திக் கொண்டு போயிருக்கும். அது போக பிசி ஸ்

Chennai: மழை வரும்போதெல்லாம்.. நாம் நனைவோமே.. நினைவில்!

மழைக்காலம் என்றாலே காகிதக் கப்பல் விட்ட பழைய காலம் போல இப்போதெல்லாம் இல்லை.. அதிலும் சென்னைவாசியாக இருந்தால்.. அயயோ மறுபடியும் மழையா.. இந்த வாட்டி வீட்டுக்குள் வெள்ளம் வருமா இல்லை வராமல் தப்பிருவோமா என்ற பய பீதிதான் முதலில் வந்து முகத்தில் அப்புகிறது. அப்படி ஊரை நாசப்படுத்தி வச்சிருக்கோம்! திட்டமிடாத வளர்ச்சி, திரும்பிய பக்கமெல்லாம் கான்க்ரீட் காடுகள், கால்வாய் எங்கெல்லாம் இருக்கிறதோ அதையெல்லாம் ஆக்கிரமித்து அழித்து வைத்திருப்பது, ஏரிகள் இருந்த இடமெல்லாம் இன்று ஏரியாவாக மாறியிருக்கும் அவலம் என்று சென்னையை மானபங்கப்படுத்தி வைத்திருக்கிறது நகர்ப்புற வளர்ச்சி! அதை விடுங்க.. பல காலத்துக்கு முந்தைய சென்னையின் ஒரு மழைக்காலத்தை இப்போது பார்க்கலாம். அது 1995, மாதம் சரியாக நினைவில்லை. நான் கதிரவன் நாளிதழில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சமயம். மதியம் ஷிப்ட்.. ஸோ காலையில் நல்லா தூங்கிட்டு லேட்டாக எழுந்த நான் 12 மணி போல அலுவலகம் கிளம்பினேன். தங்கியிருந்த இடம் திருவல்லிக்கேணி.. அலுவலகம் ஆயிரம் விளக்கு. வழக்கமாக பஸ்ஸில் வரும் நான், அன்று நடந்து போகலாமா என யோசித்தேன்.. காரணம் ரம்மியமான கிளைமேட். வெளிய

முக்குலத்தோர் மனங்களை.. மொத்தமாக அள்ள திட்டமிடும் சசிகலா!

தெற்கத்தி அரசியல் தமிழ்நாட்டு அரசியலில் எப்போதுமே தனி டிசைனாக இருக்கும். இங்கு முக்கியமான வாக்கு வங்கியாக இருப்பது முக்குலத்தோர் சமுதாயத்தினர். வடக்கில் வன்னிய சமுதாயத்தினர் பெரும்பாலும் பாமக பக்கம் இருக்கிறார்கள். அது சில நேரம் கூடவோ, குறையவோ செய்யும்.. மற்றபடி வன்னியர் வாக்கு வங்கி பாமகவை இன்னும் வலுவாகவே தாங்கிப் பிடிக்கிறது. ஆனால் முக்குலத்தோர் வாக்கு வங்கி அப்படி இல்லை. எம்ஜிஆர் காலத்தில் அதிமுகவை வலுவாக ஆதரித்தது. பின்னர் திமுக கொஞ்சம் வாக்குகளை உறுவியது. திடீரென நடிகர் கார்த்திக் ஒரு அலை பரப்பினார். ஆனால் வாக்கு வங்கியை முழுமையாக சேர்ப்பதற்குள் அவர் அடித்த பல்டிகளும், செய்த கோமாளித்தனமும், அந்த வாக்கு வங்கியை வேறு பக்கம் போக வைத்து விட்டது. இப்படி யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்ற நிலையில்தான் முக்குலத்தோர் வாக்குகள் இன்று வரை சிதறிக் கிடக்கின்றன. தென் மாவட்டங்களில் வலுவாக உள்ள முக்குலத்தோர்  சமுதாயத்தினரை வழி நடத்த சரியான தலைவர் இல்லாததே இதற்குக் காரண்ம். வன்னியர்களுக்கு டாக்டர் ராமதாஸ் கிடைத்தது போல, ஒரு ஆணித்தரமான தலைவர் முக்குலத்தோர் சமுதாயத்திற்குக் கிடைக்கவில்லை

"Ariv" .. "Hariv" .. "Algan".. எல்லாம் நானேதான்!

ஸொமேட்டா - இந்தி விவகாரம் வெடித்துக் கொதித்துக் கொண்டிருக்கும் இந்த பின்னணியில் எனது பெங்களூர் டைரியை சற்றே புரட்டிப் பார்த்தேன்...  தமிழனாக இருப்பதை விட சுத்தமான தமிழில் பெயர் வைத்துக் கொண்டோர்தான் வாழ்க்கையில் பல சிரமங்களைச் சந்திப்பார்கள்.. அதை அனுபவப் பூர்வமாக பெங்களூரில் கண்ட காலம் அது. ஒரு தமிழனாக எனக்கு அங்கு பெரிய சங்கடங்கள் வந்ததில்லை.. தங்கமான உள்ளங்களைத்தான் நிறைய பார்த்திருக்கிறேன்.. ஆனால் எனது "பெயர்"தான்.. அந்தப் பெயர்தான்.. அதுதான்.. அதை நினைச்சாதான்! சற்றேறக்குறைய 25 வருடங்களுக்கு முன்பு நடந்த சில மொழி களேபரங்கள் குறித்த ஒரு சுவாரஸ்ய தொகுப்பு.. உங்களுக்காக! "கான், அறிவழகா.. இரண்டு பேரும் பெங்களூர் ஆபீஸ்ல வேலை பார்க்கறீங்களா.. அங்கு டெஸ்க் வீக்கா இருக்கு.. சிலரை ரிப்பேர் பார்க்கணும்.. போறீங்களா.. உங்க ஒப்பீனியன் என்ன?" ஆ.. பெங்களூரா.. செம கூலா இருக்குமே..  போகலாமே.. இதுல என்ன பிரச்சினை இருக்கப் போகுது... எடிட்டர் ஆர்.எம்.டி. சொன்னவுடன் மனதில் உதித்த எண்ணம் இது. மதுரை, சென்னையைத் தாண்டி வேறு எந்த வெளியூரைப் பற்றியும் கனவு கூட கண்டிராத "கழுதைகளுக்க

காலின் பாவல் இறந்தது எப்படி?

காலின் பாவல்.. அமெரிக்கர்களால் மட்டுமல்ல, உலக நாடுகளாலும் மறக்க முடியாத பெயர். அமெரிக்காவின் முதல் கருப்பர் இன வெளியுறவு அமைச்சர், அமெரிக்க ராணுவ தளபதியாக இருந்தவர்.. மிக முக்கியமான காலகட்டத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சராக செயல்பட்டவர். 84 வயதான பாவல், ரத்த புற்றுநோய் காரணமாக இறந்துள்ளார். அவரது மரணம் பல சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது. காரணம், அவருக்கு  கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அதன் பின்னர் அவர் மரணமடைந்துள்ளார். இத்தனைக்கும் அவர் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர். இதுதான் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கொரோனா தடுப்பூசியினால் உண்மையில் பலன் இருக்கிறதா இல்லையா என்ற விவாதம் அமெரிக்காவில் வெடித்துள்ளது. பாவலுக்கு 2 டோஸ் தடுப்பூசி போட்டும் அவர் மரணமடைந்திருப்பது ஏன் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர் தடுப்பூசிக்கு எதிரானவர்கள். ஆனால் பாவல் மரணத்திற்கு கொரோனா காரணம் அல்ல என்றும் அவருக்கு ஏற்கனவே இருந்த ரத்தப் புற்றநோய் பாதிப்பே காரணம் என்றும் டாக்டர்கள் விளக்குகின்றனர். பிரபல மருத்துவ நிபுணர் டாக்டர் லீனா வென் இதுகுறித்துக் கூறுகையில், அறிவியலையும், அறிவியல் ஆய்வுகளையும் முதலில் நாம

ஒருவரின் தவறு.. ஒட்டு மொத்த நிறுவனத்தையும் சீர்குலைக்கும்.. லேட்டஸ்ட் பாடம் Zomato!

ஒரு சிறிய தவறுதான்.. ஆனால் இன்று ஒட்டு மொத்த ஸொமேட்டோ நிறுவனத்தையும் ஆட்டம் காண வைத்து விட்டது. "வாயடக்கம்" தேவை.. அதை விட முக்கியம், வாடிக்கையாளர்களை மதிப்பது. இதில் கோட்டை விட்டதால் ஸொமேட்டோ நிறுவனத்துக்கு பாடம் புகட்டி ஒரு காட்டு காட்டி விட்டார்கள் மக்கள். வாடிக்கையாளர்கள் சேவைக்காக விழுந்து விழுந்து பாடுபட்ட காலமெல்லாம் மலையேறிப் போய் விட்டது. இப்போதெல்லாம் பொருளையும் வாங்கி விட்டு அதில் பழுது ஏற்பட்டால் அதை சரி செய்ய அந்த நிறுவனங்களுடன் போராடி போராடி தாவு தீர்ந்து போகும் அளவுக்கு படுத்தி எடுத்து விடுகின்றன பல நிறுவனங்கள். சாதாரண பிரச்சினைக்குக் கூட பெரும் போராட்டத்தை சந்திக்க வேண்டியுள்ளது. எதையுமே எளிதாக பெற முடிவதில்லை. மாறாக, பல்வேறு சண்டைகளுக்குப் பிறகுதான் நிவாரணம் கிடைக்கிறது. ஸொமேட்டோ விவாகரமே அதற்கு சான்று. ஒரு வாடிக்கையாளர் தான் ஆர்டர் செய்த உணவுப் பொருளில் ஏதோ ஒன்று வரவில்லை, அதற்கு ரீ ஃபன்ட் செய்யுங்கள் என்று கேட்கிறார்.  சாதாரண பிரச்சினைதான் இது.. ஒன்று ஸாரி சொல்லி விட்டு ரீஃபன்ட் செய்திருக்கலாம் அல்லது நிவர்த்தி செய்கிறோம் சற்று பொறுமை காக்கவும் என்று சொல்லி

விநோதய சித்தம்.. மறக்காமல் பாருங்க!

எனக்கு அதுக்கெல்லாம் நேரம் இல்லை.. வேலை கிடக்கு தலைக்கு மேல.. காலில் வெந்நீர் ஊற்றிக் கொள்ளாத குறையாக ஓடிக் கொண்டிருப்போரை இழுத்துப் பிடித்து தலையில் லேசாக ஒரு கொட்டு வைத்திருக்கிறது.. விநோதய சித்தம்... தமிழ்ப் படம். ஒரு அருமையான Feel Good படம்.. வழக்கமாக கருத்துக்களைப் பிழிந்து பிழிந்து ஜூஸ் போட்டுக் கொடுக்கும் சமுத்திரக்கனியை இதில் வேற லெவலில் பார்க்கலாம். படத்தை இயக்கியிருப்பவரும் அவரே. கொஞ்சம் கேரக்டர்கள்தான். அதை வைத்து மிகப் பெரிய கருத்தை மக்களுக்குப் "பாஸ்" செய்துள்ளார் சமுத்திரக்கனி. தம்பி ராமையாதான் கதையின் நாயகன்.. என்னால்தான் எல்லாம் நடக்கிறது.. நான் இல்லாவிட்டால் ரொம்பக் கஷ்டம்.. எனக்கு நேரமே இல்லை... என்று எப்போதும் சதா வேலையிலேயே கருத்தாக இருக்கும் நபர்தான் நம்ம தம்பி சார். அவரது மனைவியாக ஸ்ரீரஞ்சினி. இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள். ஒரு நாள் தம்பி ராமையா கோவை போய் விட்டு சென்னை திரும்பும் வழியில் மரணத்தைத் தழுவுகிறார். அதன் பிறகு நடப்பதுதான் படத்தின் கதை.. வித்தியாசமான சப்ஜெக்ட்தான். அதை பிரசன்ட் செய்த விதம்.. சபாஷ் போட வைக்கிறது.  சமுத்திரக்கனி கேரக்டர் இந்தப்

தனிமை ஒரு வலி!

பிம்பங்கள் 'சில் அவுட்'டாக 'போகஸ்' ஆகாத சிந்தனைகள் மனதுக்குள் சின்னதாக 'வாக்கிங்' போக... ........ தனிமை ஒரு வலி! நடந்த பாதைகள் பார்த்த பார்வைகள் பேசிய பேச்சுக்கள் ........ தனிமை ஒரு வலி...! காற்றுடன் பேசி கலந்து சிரித்து மகிழ்ந்து உலாவி உட்புகுந்த சந்தோஷங்கள் உட்கார்ந்து யோசிக்கும்போது இதயம் பிசையும் தருணங்கள் ..... தனிமை ஒரு வலி...! கனவுகள் மட்டும் துணையாக காட்சிகள் எல்லாம் பிழையாக கண்ணோரம் வந்து நிற்கும் அந்த சின்னத் துளி ....... தனிமை ஒரு வலி...! வருடங்கள் மாதங்களாய் மாதங்கள் நாட்களாய் நாட்கள் மணித்துளிகளாய் மணித்துளிகள் நிமிஷங்களாய் நிமிஷங்கள் நொடிகளாய் போனதெல்லாம் இப்போது 'ரிவர்ஸில்'.... தனிமை ஒரு வலி...! (2013ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி எழுதிய கவிதையின் மீள் பதிவு)

வா.. வாத்யாரே!

இந்திய கிரிக்கெட் அணிக்கு சரியான வாத்தியார் கிடைத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணிக்கு கோச்சாக இருப்பதற்கெல்லாம் பெரிய பாண்டித்யம் தேவைப்படாது. அதற்குப் பதில், அணியின் சீனியர்களை சரியாக கையாளத் தெரிந்தாலே போதும், அந்த கோச் தனது முழு பதவிக்காலத்தையும் சத்தமில்லாமல் முடித்து விடலாம். இதுதான் இன்று வரை உள்ள நிலவரம். ஆனால் இந்திய கிரிக்கெட் அணியின் மென்டார் ஆக மாறியுள்ள மகேந்திர சிங் தோனி மீது ஒரு தனி எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியில் வீரராகவும், விக்கெட் கீப்பராகவும் அறிமுகமாகியபோது ஒரு புயலென கலக்கியவர் அவர். அதன் பின்னர் அவரிடம் கேப்டன் பொறுப்பு வந்த பிறகு அந்த பொறுப்பை யாரும் எதிர்பாராத வகையில் திறமையாக நிர்வகித்தவர். அவர் தொட்டதெல்லாம் துலங்கியது, அவர் சொல் பேச்சு கேட்டு நடந்த ஒவ்வொரு வீரரும் அவரவர் திறமையில் உச்சம் தொட்டனர். தட்டிக் கொடுத்து வேலை வாங்குவதிலும், யாருக்கு என்ன திறமை இருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அதன் போக்கில்  அவர்களைக் கொண்டு சென்று சிறந்ததைப் பெறுவதிலும் தோனிக்கு நிகர் தோனிதான். இதனால்தான் ஒவ்வொரு கோப்பையையும் தோனி அணி சொல்லி சொல்லி அடித்து வந்

ஓர்மைகளின் பாரம் சுமந்து..!

எத்தனை கனவுகள் என்னென்ன நினைவுகள் மாடியில் ஓடியாடி உன் மடியில் படுத்துறங்கி செல்லச் சண்டைகள் போட்டு படபடவென பட்டாம் பூச்சியாய் ஒவ்வொரு அறைக்குள்ளும் புகுந்து புறப்பட்டு மழைக்காலங்களில் காகிதக் கப்பல் விட்டு மொத்தக் குடும்பமாய் மொட்டை மாடியில் படுத்துறங்கி வான் நோக்கி விழி பார்க்க கதை பேசி.. ஜன்னலோரம் வந்தமர்ந்த குருவிகள் எத்தனை எத்தனை பெல்லடித்தபடி ரோட்டில் சென்ற சைக்கிள்கள் பார்த்துச் சிரித்த பல நாட்கள் காற்றடித்த காலத்தில் படபடத்த கதவு ஜன்னல்கள் பத்திரமாய் பாய்ந்தோடி சாத்தி வைத்த பொழுதுகள்.. தூரத்தில் தெரிந்த அப்பாவின் தலை பார்த்து கதவு திறந்து ஓடிச் சென்று  கையில் பிடித்து வரும் பையை பிடுங்கி அப்பையில் பொதிந்து கிடக்கும் அன்பைப் பகிர்ந்து.. உன் மடியில் சாய்ந்த போதெல்லாம் அரவணைத்து ஆறுதல் தந்து  சிந்திய கண்ணீரையும் கிளர்ந்து முகிழ்த்த புன்னகைகளையும் சுகமான பாரமாய் தாங்கி நின்ற சுவர்கள்.. ஓர்மைகளின் பாரம் சுமந்து நீ வீழ்ந்த அந்தத் தருணம் மழை நீரில் கலந்து கரைந்தது எங்கள் ஓலங்கள் உன்னைப் பார்த்துப் பார்த்துக் கட்டிய.. அம்மையும் அச்சனும் விவரிக்க முடியா விசனத்துடன்..! நீரில் நீ விழவில்ல

என் துயரத்தின் முடிவில்.. ஒரு கதவு காத்திருந்தது.. அதன் பெயர் மரணம்!

"என் துயரத்தின் முடிவில் ஒரு கதவு காத்திருந்தது அதன் பெயர் மரணம்" அவர்தான் லூயிஸ் கிளக்.. ஆம்.. மரணத்தையும் கூட அழகாக வர்ணித்தவர் லூயிஸ்.. அமெரிக்காவைச் சேர்ந்த லூயிஸ் க்ளூக், இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றவர். 77 வயதாகும் லூயிஸ், நியூயார்க்கைச் சேர்ந்தவர்.. அவர் தொடாத தலைப்பே இல்லை என்று சொல்லும் அளவுக்கு கவிதைகளில் ஊறித் திளைத்தவர். அவரது கவிதைகளை ரசிக்க மட்டுமில்லை.. அறிவுப்பூர்வமாகவும் நுகர முடியும்.. அதுதான் லூயிஸ் டச்! தனிமை, குடும்ப உறவுகள், விவாகரத்து, ஏன் மரணத்தையும் கூட தனது கவிதைகளால் அலங்கரித்துள்ளார் லூயிஸ். இவரது கவிதைகளில் ரோம் மற்றும் கிரேக்க கலாச்சாரங்களின் சாயல்களும் மெல்ல இழையோடியபடி காணப்படும். ஆரம்ப காலத்தில் அவரது கவிதைகளில் நிறைய காதல் தோல்வி குறித்துதான் இருந்தன. குடும்ப உறவுகளில் ஏற்பட்ட சீர்குலைவுகள், மனம் உடைந்து போய் குமுறிய நாட்கள், வாழ்வதற்கான வழிகளே புலப்படாமல் சிரமப்பட்டது என்று தன்னை மையப்படுத்தியே நிறைய கவிதைகளை வடித்து வந்தார் லூயிஸ்.. ஆனால் பின்னாட்களில் அவரது கவிதைகளின் பயணம் பாதை மாறியது.. ஆனாலும் கூட அதிலும் துயரங்களே மிகையாக தெறித்த

மழையின் தொடுதல்.. உன் விரல் உரசியபொழுது!

மழையின் தொடுதல் உன் விரல் உரசியபொழுது மண்ணைத் தொட்ட அந்த மழை என் மனதைக் கிளறிய பெரு மழை! கொட்டும் துளிகளுக்கு மத்தியில் பத்து விரல்களும் கோர்த்தபடி பத்திரமாய் பார்த்துப் பார்த்து தாவித் தாவி நாம் நடந்தபோது மழையும் நம்மை ரசித்திருக்கும் நாம் மழையை ரசித்தது போல தூரத்தில் தெரிந்த வெளிச்சப் புள்ளி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி பளீரென வெடித்த மின்னல் சிரிப்புடன்.. கால் நடக்க..  தூரம் கடந்தும்.. மழையின் துளிகளில் கலந்து.. மறக்க முடியாத மழைக்காலம்..! இருவருக்கும் இடையில் பெய்த மழையில் நனைந்து கிடந்தது நம் காதல் வான் மழை வரும்பொழுதெல்லாம்.. நினைவுகளும் சடசடவென மெல்ல மெல்ல.. சொட்டுச் சொட்டாய்... துளித் துளியாய் பருகியபடி.. ஒவ்வொரு துளியிலும் நம் முகம் பார்த்தபடி! காதலின் துணைக்கோள்தான் இந்த மழையா? நம் காதலைச் சுற்றிச் சுற்றி வருகிறதே! மழை வரும்போதெல்லாம் நீயும் வந்து விழுகிறாய் மழைத் துளி என் கன்னம் தொடுவதற்குள் நீ என் உள்ளம் நனைத்து விடுகிறாய் மின்னலின் வேகத்தில்! முன்பு போல மழையில் நனைவதில்லை ஆனாலும் உள்ளுக்குள் பெய்யும் மழையில் எப்போதும் நனைந்தபடி.. நினைவலைகளில் நீந்தியபடி..  கா(கி)தல் க

ஆர்ட்டிகிள் 15.. அப்படியே எடுப்பாங்களா.. இந்தி சூடு குறையாமல்?

இந்தியில் அவ்வப்போது நல்ல சினிமாக்கள் வருகின்றன. கிட்டத்தட்ட மலையாள சினிமாவுக்குப் போட்டியான படங்களை  ஆங்காங்கே பார்க்க முடிகிறது. அப்படிப்பட்ட அபூர்வ படங்களில் ஒன்றுதான் ஆர்ட்டிகிள் 15. ஆயுஷ்மான் குராணா நடிப்பில் வெளியான ஆர்ட்டிகிள் 15 படமானது, 2 தலித் சிறுமிகளின் கொடூர பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை குறித்த கதை. வட இந்தியாவில் ஜாதித் தீயின் கொடூர நாவுகளில் சிக்கி சின்னாபின்னமாகும் பெண்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம் இது. இந்தப் படத்தைத்தான் தற்போது நெஞ்சுக்கு நீதி என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்கிறார்கள். உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார்.  Article 15 என்றால் என்ன.. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 15 என்ன  சொல்கிறது என்றால், ஜாதி, இனம், மொழி, பிறப்பிடத்தின் அடிப்படையில் யாரும், யாருக்கும் இளைத்தவர்கள் அல்ல.. அனைவரும் சமமே...  இந்த கருத்தை அடிப்படையாக வைத்துத்தான் இந்தப் படத்தின் கதையை பின்னியுள்ளனர். ஒரு குக்கிராமம்.. ஜாதி வெறியின் உச்சத்தில் உழன்று கிடக்கும் கிராமம். உயர்ந்த ஜாதியினரின் அடிமைகள் போல பட்டியலின மக்கள் நடத்தப்படுகின்றனர். அன்ஷு நெஹரியா என்பவனது நிறுவனத்தில்

"எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் பாத்துக்குவாங்க".. சசிகலா ஏன் அப்படிச் சொன்னார்?

எம்ஜிஆரும், ஜெயலலிதாவும்தான் இனி கழகத்தைக் காப்பாற்ற வேண்டும் .. காப்பாற்றுவார்கள் என நம்புகிறேன் என்று சசிகலா கூறியிருப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. தன்னால் இனி கட்சியை மீட்க முடியாது என்பதை மறைமுகமாக அவர் சுட்டிக்  காட்டியுள்ளாரா என்ற அர்த்தத்திலும் இதைப் பார்க்க வேண்டியுள்ளது. மறைந்து போய் விட்ட இந்த தலைவர்கள் கழகத்தைக் காப்பாற்றுவார்கள் என்று சசிகலா ஏன் கூற வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. பெங்களூர் சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு அதிகமுவைக் கைப்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர் சசிகலா. ஆனால் சிறையிலிருந்து வந்த முதல் நாள் ஏற்படுத்திய பரபரப்போடு அப்படியே அமைதியாகி விட்டார். திடீரென ஒரு நாள் அரசியலுக்கு முழுக்குப் போடுவதாகவும் கூறி விட்டு கப்சிப்பென்று ஆகி விட்டார்.  பின்னர் தேர்தல் சமயத்தில் கட்சிக்காரர்களுடன் போனில் பேசினார். அந்த ஆடியோக்கள் வெளியாகி புதிய பரபரப்பைக் கிளப்பின. ஆனால் அதிமுகவை அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த நிலையில் இன்று ஜெயலலிதா சமாதிக்கு வந்து போயுள்ளார். சிறையிலிருந்து வந்த பிறகு முதல் முறையாக இன்றுதான் ஜெயலலிதா சமாதிக்கு வந்தார் சசிகலா. சி

மகேந்திர சிங் தோனி.. லீடர்னா இப்படி இருக்கணும்!

"Still I haven’t left behind" .. இதுதான் மகேந்திர சிங் தோனி தனது ரசிகர்களுக்கு நேற்று இரவு கொடுத்த மெசேஜ். ஒரு டீம் லீடர் எப்படி இருக்க வேண்டும்.. ஒரு கேப்டன் எப்படி செயல்பட வேண்டும்.. ஒரு தலைவன் எப்படி உத்திகளை வகுக்க வேண்டும்.. இதற்கெல்லாம் பெஸ்ட் உதாரணம் தோனி மட்டுமே.. தான் சரியாக ஆடுகிறோமோ இல்லையோ, தனது டீம் சரியாக செயல்பட வேண்டும் என்பதில் முனைப்புடன் இருப்பவன்தான் நல்ல தலைவனாக இருக்க முடியும். ஒவ்வொரு விஷயத்திலும் பார்த்துப் பார்த்து தெளிவாக, குழப்பமில்லாமல் திட்டமிடும் தலைவனைக் கொண்ட அணிதான் எப்போதுமே வெல்லும்.. புலி பதுங்கித்தான் பாயும்.. அப்படித்தான் தோனி டீமும். 2018ம் ஆண்டுக்குப் பிறகு அந்த அணிக்கு கோப்பை கை கூடவில்லை. கடந்த வருடமோ மிகவும் அவமானகரமாக வெளியேற்றப்பட்டது. ஆனால் இந்த முறை அது அடித்த அடியைப் பார்த்து அத்தனை பேரும் மிரண்டு போய் விட்டனர். தோனியின் கேப்டன்ஷிப்.. 100 சதவீதம் தரமானது என்பதை நேற்று நடந்த இறுதிப் போட்டியும் அழுத்தம் திருத்தமாக உணர்த்தி விட்டது. ஒவ்வொரு வீரராக பார்த்துப் பார்த்து ஸ்கெட்ச் போட்டுத் தூக்கிய விதம், ரசிகர்களை உற்சாகத்தின் உச்சிக்கே

"நிலா அது வானத்து மேலே".. முதலில் காதல் நவரசம்.. இப்போது பக்திப் பரவசம்..!

இசைஞானி இளையராஜாவின் ஒவ்வொரு பாடல் உருவான விதத்திலும் ஒரு சுவாரஸ்ய கதை புதைந்திருக்கும். அதுகுறித்து அவரது வாயாலேயே நிறைய கேட்டிருக்கிறோம். அவருடன் இருந்தவர்கள் சொல்லியும் பல கதைகள் கேட்டிருக்கிறோம். அப்படி ஒரு பாடல்தான் நிலா அது வானத்து மேலே. நாயகன் படத்தில் இடம் பெற்ற ஐக்கானிக் ஐட்டம் சாங் அது. ஆனால் அது முதலில் உருவான விதமே வேறு. தாலாட்டுப் பாட்டு ஒன்றுக்கு டியூன் கேட்டுள்ளார் மணிரத்தினம். அதற்காக ராஜா போட்ட ட்யூன்தான் நிலா அது வானத்து  மேலே பாடலுக்கான டியூன். ஆனால் அந்த டியூனைக் கேட்ட மணிரத்தினத்திற்கு வேறு யோசனை வந்துள்ளது.. இதை குயிலி ஆடும் ஐட்டம் பாடலுக்கான ட்யூனாக மாற்றி விடலாமா, மாற்றித் தருகிறீர்களா என்று கேட்க, ஒரு நொடி கூட யோசிக்காமல்.. அதற்கென்ன மாத்திட்டா போச்சு என்று அப்படியே டியூனை மாற்றி விட்டார்.  அதன் பிறகு இந்த ட்யூனுக்குப் பதில் தாலாட்டுப் பாடலாக ராஜா போட்டதுதான் தென் பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே பாடல். இந்த டியூனை வைத்துத்தான் இப்போது இன்னொரு சுவாரஸ்யத்தைக் கொடுத்துள்ளார் ராஜா. இந்த முறை அது யாரும் எதிர்பாராத ஸ்வீட் சர்ப்பிரைஸும் கூட. கொல்கத்தாவில் நவராத்தி

படமாப்பா இது.. பேயே குழம்பிப் போயிருச்சு பாருங்க!

ஒரு பேய்ப் படம்னா எப்படி இருக்கணும்.. எவ்வளவு தைரியசாலியா இருந்தாலும் சீட் நுனியில் கொண்டு வந்து உட்கார வைக்கணும்.. அவ்வப்போது திடுக்கிட்டு பயந்து அலறணும்.. வியர்த்துக் கொட்டணும்.. ம்ஹூம்.. அரண்மனை 3 படம் பார்த்தப்போ இதெல்லாம் ஒன்று கூட நடக்கவில்லை.  சரி பேய்ப் படத்தில் காமெடி இருக்குமே.. நல்லா சிரிக்கலாமே என்று பார்த்தால் அதற்கும் ஆப்பு வைத்திருக்கிறார்கள். காமெடியர்கள் ஒன்றுக்கு நாலாகவே இருந்தும் கூட வயிறு வலிக்க சிரிக்க முடியவில்லை. அவ்வப்போது வாயை விரிய வைத்ததோடு சரி.. அதிலும் வஞ்சம் செய்து விட்டார்கள். அரண்மனை 3.. முதல் இரு படங்களும் அருமையாக இருந்ததால், 3வது படம் குறித்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் பெரிதாக சொதப்பியுள்ளார் இயக்குநர் சுந்தர் சி.  முதல் இரு படத்தில் இருந்த கட்டுக்கோப்பான திரைக்கதை.. இந்த 3வது பாகத்தில் மிஸ்ஸிங். படத்தில் மொத்தம் 3 பேய். ஒரு குழந்தைப் பேய், பிறகு அதோட அம்மா பேய், அப்புறம் அந்த அம்மாவோட லவ்வர் பேய். இத்தனை பேய்கள் இருந்தாலும் ஒரு பேயும் பயமுறுத்தவில்லை.. அதுதான் சப்பென்று போய் விட்டது. பேய்ப் படங்களுக்குரிய அத்தனை அம்சங்களும் இதில் இருக்கிறது.. கரும